சிறுகதை; விசாலம்!

ஓவியம்; சசி
Short Story in Tamil
Updated on
Kalki Strip
Kalki Strip

-பத்மா ரவிசங்கர்

"விசாலம்"

"என்ன...?"

"நீ இன்னும் முடிவு சொல்லலியே?"

"யோசிச்சுக்கிட்டு இருக்கேன்."

"யோசிச்சது போதும்! சட்டுனு சம்மதம்னு சொல்லு. முழுசா மூணு மாசம்கூட உன் திருமண வாழ்க்கை நிலைக்கலை."

"ப்சு எனக்குத் தாலி கட்டின பாவம்தான் சந்துரு அகாலமா இறந்துட்டார். என் துரதிர்ஷ்டம் உங்களையும் - "

"நான்சென்ஸ்' இந்த யுகத்துல என்ன பேச்சு இது! சந்துரு இறந்து ரெண்டு வருஷம் ஆச்சு. இனியும் வாழ்க்கையை வீணடிக்கலாமா? மகிழ்ச்சியா வாழத்தான் வாழ்க்கை."

"..........................."

''பெங்களூர்லருந்து மாற்றலாகி நான் இங்கு வந்தது என் அதிர்ஷ்டந்தான். 'என் விசாலத்தைச் சந்திக்க முடிந்ததே! சரி இவ்வளவு அழகான உனக்கு அதென்ன விசாலம்னு பழங்காலப் பெயர்....?"

"பேருல என்னங்க இருக்கு?''

"மனசுதாங்கிறியா?"

"ஊம்."

"எனக்கும் விசால மனசுதாம்மா. உன் மாதிரி ஒரு பெண்ணைத் திருமணம் செய்யணும்தான் மனசு அலை பாய்ஞ்சுக்கிட்டிருந்தது. மாற்றலாகி நான் இங்கு வந்து நாலு மாசமாச்சு. இன்னும் ஒத்துக்காம டபாய்க்கிறியே..."

"இன்னும் ரெண்டொரு நாள் போகட்டும்."

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com