சிறுகதை - மாண்டவன் மீண்ட மருத்துவ அதிசயம்!

தேசிய மருத்துவர் தினம் ஜூலை 1st 2024
hospital
hospital

திடீரென்று விழித்தெழுந்து பார்த்தான் பாலு. தான் இருப்பது ஒரு ஆஸ்பத்திரியில், அதுவும் ஐ சி யு என்பதை புரிந்து கொண்டான். உடனே சங்கரின் ஞாபகம் வந்தது. அவன் பக்கத்து படுக்கையில் படுத்திருப்பதை பார்த்தான். நெனவில்லாமல் தான் இருந்தான். இவனே இப்பொழுதுதானே நெனவுக்கு வந்தான்.

பக்கத்தில இருந்த நர்ஸிடம் நடந்ததையெல்லாம் கேட்டான். பாலு வரும் வழியில மெட்ரோ வேலை நடந்துட்டு இருக்கு. முன்னால் போன கார் ஒன்னு திடீர்னு பிரேக் போட்டு நின்னுது. பின்னால மோட்டர் சைகல்ல போன பாலு கார் மேல மோதினான். பின்னாடி வந்த கார் ஒன்னு இவங்க மேல மோத, வண்டிய ஓட்டிய பாலுவுக்கும், பின்னால ஒக்காந்து வந்த சங்கருக்கும் பலத்த அடி. ஹெல்மெட் போட்ட பாலுவுக்கு ரொம்ப அடி இல்ல. ஆனா, ஹெல்மெட் இல்லாம இருந்த சங்கருக்குத்தான் மண்டையில பலத்த அடி.

அவனை சமாதானப்படுத்திய நர்ஸ், ’சிறிது நேரம் கண்ணை மூடி ஓய்வு எடுங்க’ன்னு சொன்னார். டாக்டர் இவன செக் பண்ணிட்டு அவுட் ஆஃப் டேஞ்சர்னு சர்டிஃபிகேட் கொடுத்துட்டு அடுத்த பேஷண்ட பார்க்க நகர்ந்தார்.

இவனுக்கும் ட்ரிப்ஸ் ஏறிட்டு இருந்தது. எழுந்து நடக்கவும் முடியல. யாரும் அனுமதிக்கவும் இல்ல. வெளியிலே இருந்த அவனோட அம்மா உள்ள வந்தாங்க. கொஞ்ச நேரம் ஆனந்த கண்ணீர் விட்டுட்டு தன் பையன காப்பாத்தின கடவுளுக்கு நன்றி சொன்னாங்க. இப்ப இரண்டு பேர் கவலையும் சங்கர் மேல போயிடுத்து.

சங்கர் இன்னும் சுயநெனவுக்கு வரல. அவனுக்கு இப்பதான் கல்யாணம் ஆகி, அவனோட பொண்டாட்டி டெலிவரிக்கு அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்காங்க. பாலுவுக்கு ஏற்பட்ட குற்ற உணர்ச்சியின் அளவு அதிகரிச்சுட்டே போனது.

சங்கர் பெட்டுக்கு போன டாக்டர் டீம் அவனுக்கு அவசரமா சில இன்ஜெக்ஷன்கள போடச் சொன்னாங்க. நர்ஸ்களும் மிக வேகமாக அங்கும் இங்கும் ஓடி டாக்டர் சொன்னதையெல்லாம் செஞ்சாங்க. சங்கர எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க ஸ்ட்ரெச்சர்ல கூட்டிட்டு போனாங்க. ஒரு மணி நேரம் கழிச்சு திரும்ப கூட்டிட்டு வந்தாங்க. நடுவுல வாந்தி எடுத்து இருக்கான். அந்த வாந்தி அவனுடைய நுரையீரல்ல போய் இருக்கு. அதனால மூச்சு திணறல் ஏற்பட்டு கொஞ்ச நேரம் இதயத் துடிப்பு நின்னுருக்கு. மூளைக்கு அஞ்சு நிமிஷம் பிளட் போகலைன்னா ஒருத்தர் இறந்து போனதாகத்தான் அர்த்தம். அந்த நெலையிலத்தான் இருக்கான் சங்கர் இப்போது. கோமா நெலைக்கே போயிட்டான்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை - மணியோசை!
hospital

இதுக்கு நடுவுல அவனுடைய பாடி டெம்பரேச்சர் வேற டவுன் ஆயிடுச்சு. ரூம் பூரா உடம்புல சூடு ஏத்துற மாதிரி லைட் போட்டாங்க. பாடி டெம்பரேச்சர் நார்மல் நிலைக்கு வந்தது. நாலு நாலா டிரிப்ஸ், இன்ஜெக்க்ஷன், இசிஜி, எக்ஸ்ரே, எம் ஆர் ஸ்கேன் இப்படி எல்லா ட்ரீட்மென்ட்டும் நல்லாத்தான் போயிட்டு இருக்கு. ஆபீஸே எல்லா செலவையும் எடுத்துகிச்சு. அதனால ஹாஸ்பிடல் ட்ரீட்மென்ட்ல ஒரு குறையும் சொல்ல முடியாது.

அவனுடைய மனைவிக்கும் இதுவரைக்கும் தெரிவிக்கல. டாக்டரெல்லாம் கைய விரிச்சுட்டாங்க. இனி கடவுள் தான் காப்பாத்தனும்னு சொல்லி, ரெண்டு மணி நேரம் கெடுமட்டும் கொடுத்துட்டு அடுத்த வார்டுக்கு போயிட்டாங்க.

சங்கர காப்பாத்திக் கொடுன்னு தனக்கு நெனவுல வந்த எல்லா கடவுளயும் வேண்டினான் பாலு. அன்று இரவு 11 மணி இருக்கும்.லேசா இடது கைய அசைச்சான் சங்கர். பக்கத்தில் இருக்கிற பாபுவுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.கொஞ்ச நேரத்துல கண்ண லேசா திறந்து பாரத்தான்.

னி பயப்பட ஒன்னுமில்ல.

மூணு நாள்ல அவன டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்க. ’ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்துட்டு, ரெவ்யூக்கு வந்துட்டு ஆபீஸ் போங்கன்னு’ சொன்னாங்க டாக்டர். அவங்க மனைவிக்கு சேதிய சொன்னோம். வந்து எங்களுக்கெல்லாம் தேங்க்ஸ் சொன்னாங்க. குற்ற உணர்ச்சியில நான் பேசாமா இருந்துட்டேன்.

நாட்கள் கடந்தன. ஆனா இன்னிக்கும் நெனச்சாலும் சங்கர் பொழச்சது அதிசயமாத்தான் இருக்கு. இது மருந்தோட பலனா? எங்களோட பிரார்த்தனையோட பலனா? எங்களுக்கு தெரியல. ஒருவேளை அவங்க மனைவி செஞ்ச புண்ணியமா கூட இருக்கும். எது எப்படியோ ’மாண்டவன் மீண்டது ஒரு மருத்துவ அதிசயம்’னு டாக்டரே சொல்லிட்ட பெறகு நாம சொல்ல என்ன இருக்கு?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com