மக்கள் கல்வி கற்பதில் இந்தியாவின் சில மாநிலங்கள் பின்தங்கி இருப்பது ஏன்?

இந்தியாவின் சில மாநிலங்கள் கல்வியறிவில் அதிக வளர்ச்சி அடைந்திருந்தாலும், சில மாநிலங்கள் குறைவான கல்வியறிவுடன் வளர்ச்சி அடைய போராடி வருகின்றன.
India improve in education
India improve in education
Published on
Kalki Strip
Kalki Strip

உலகின் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. கடந்த இருபது ஆண்டுகளில் கல்வியறிவில் இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது. இருப்பினும், அதிக மக்கள்தொகையினைக் கொண்ட இந்தியாவில் வெவ்வேறு விதமான கலாச்சாரம், சாதிய ரீதியான ஏற்றத்தாழ்வுகள் போன்றவை உள்ளன. இச்சிக்கல்கள் காரணமாக மக்கள் கல்வி கற்பதில் தொடர்ந்து சவால்கள் பல இருந்து வருகின்றன.

நாட்டில் எந்த ஒரு மாநிலமும் சீரான வளர்ச்சியை அடைவதற்கு கல்வியறிவு மிகவும் முக்கியமாகும். இந்தியாவின் சில மாநிலங்கள் கல்வியறிவில் அதிக வளர்ச்சி அடைந்திருந்தாலும், சில மாநிலங்கள் குறைவான கல்வியறிவுடன் வளர்ச்சி அடைய போராடி வருகின்றன. இருப்பினும், அவ்வாறான மாநிலங்களில் கல்வியறிவை மேம்படுத்த மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகின்றன. அம்மாநில மக்களின் கல்வி அறிவின் நிலையைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

ஆந்திரா

இந்தியாவில் எழுத்தறிவின்மையில் ஆந்திர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இம்மாநிலம் தனது விவசாயம் மற்றும் ஜவுளித் தொழில்கள் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு தனது கணிசமான பங்கினை அளித்து வருகிறது. 2024-ம் ஆண்டில் அதன் எழுத்தறிவு விகிதம் 66.4% ஆகவும், ஆண்- பெண் எழுத்தறிவு விகிதங்களில் மிகப்பெரிய வேறுபாடும் இருந்தது. ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 73.4% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 59.9% ஆகவும் இருந்தது..

இதையும் படியுங்கள்:
முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாறிய மிசோரம் (mizoram)
India improve in education

ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 66.41% ஆகும். இங்கு பழங்குடி குழுக்கள் பலர் உள்ளன. மேலும், குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமுள்ள மாநிலமாகவும் இம்மாநிலம் உள்ளது. அவர்கள் பெரும்பாலும் கட்டுமான பணிகளில் உள்ளனர். அவர்கள் கல்வி பயில வேண்டிய காலத்தில் வேலைக்கு செல்ல வேண்டியுள்ளது. குழந்தைத் தொழில் முறையை ஒழிப்பதற்கு இம்மாநிலம் முயற்சிகளை எடுத்து வருகிறது.

இராஜஸ்தான்

65.8% எழுத்தறிவுடன் உள்ள இராஜஸ்தானில் ஆண்-பெண் இடையே உள்ள கல்வியறிவு விகிதம் மிகவும் பெரியதாகும். நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான இம்மாநிலத்தில் 68 மில்லியன் மக்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் கல்வி அளிப்பது இம்மாநிலத்திற்கு ஒரு சவாலான பணியாக இருக்கிறது. பாலின வேறுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல், பெண்களின் கல்வியில் கவனம் செலுத்துதல், அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவது போன்றவற்றில் ராஜஸ்தான் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

பீகார்

70.9% கல்வி அறிவுடன் பீகார் கல்வியில் பின்தங்கிய மாநிலமாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இம்மாநிலத்தில் பள்ளியின் பாடத்திட்டத்தை மேம்படுத்தவும், மாணவர்களுக்கு சிறந்த அறிவை வழங்கவும், பாலின சமத்துவத்தை கொண்டு வரவும் பீகார் அரசு தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறது.

தெலுங்கானா

தெலுங்கானா 2014 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்க மாநில அரசு தொடர்ந்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 72% கல்வியறிவு விகிதத்தைக் கொண்ட இம்மாநிலம் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்க முயற்சிகளை எடுத்து வருகிறது.

உத்தரப் பிரதேசம்

இந்தியாவிலேயே அதிக மக்கள்தொகையைக் கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 73.3% ஆகும். மக்களுக்கு படிக்கவும் எழுதவும் கற்றுக்கொடுப்பதிலும், ஏழை மக்கள் கல்வி பெற உதவுவதிலும் தற்போது கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மேகாலயா

மேகாலயாவின் கல்வியறிவு விகிதம் 74.4% ஆக இருந்தாலும், மாநிலத்தின் சில பகுதிகளில் கல்வி அறிவு இன்னும் பின்தங்கியுள்ளது. இம்மாநிலம் பெரும்பாலும் தொலைதூரப் பகுதி மற்றும் மலைப்பகுதியில் இருப்பதால், பள்ளிகளுக்கு முறையான கட்டிடங்களைக் கட்டித் தருவது மாநில அரசுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது.

ஒடிசா

ஒடிசா மாநிலம் 72.8% எழுத்தறிவு விகிதத்தை எட்டிய பிறகும் இங்குள்ள பல பழங்குடி சமூகங்கள் கலாச்சார வேறுபாடுகள் காரணமாக பள்ளிகளில் சேர்ந்து படிப்பது மிகவும் குறைவாக உள்ளது.

மாணவர்கள் வேலைக்கு செல்வதை தவிர்த்து பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிப்பதற்காக மாநில அரசு மதிய உணவு போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதிலும், ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சி அளிப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

மத்தியப் பிரதேசம்

கல்வியறிவு விகிதம் 69.3% ஆக உள்ள மத்தியப் பிரதேசத்தில் மோசமான உள்கட்டமைப்பு மற்றும் மாணவர்களுக்கு கல்வி வழங்குவதில் உள்ள மெத்தனப் போக்கால் பின்னடைவில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள பழங்குடியினரிடையே காணப்படும் பண்பாட்டு வேறுபாட்டுப் பிரச்சினையையால் கல்வி கற்பதில் அவர்களுக்கு ஏராளமான சவால்கள் உள்ளன. கல்வித் துறையின் நிலையை மேம்படுத்த மாநில அரசு பல திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகிறது.

அருணாச்சலப் பிரதேசம்

அருணாச்சலப் பிரதேசம் இயற்கை அழகிலும், தனித்துவமான கலாச்சாரத்திலும் சிறப்பான நிலையைக் கொண்டுள்ளது. 66.95% கல்வியறிவுடன் இம்மாநிலம், தரமான கல்வியை வழங்குவதில் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. இம்மாநிலம் பல தொலைதூரங்களில் எளிதில் அணுக முடியாத பகுதிகளைக் கொண்டுள்ளது. போதுமான உள்கட்டமைப்பு, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் மொழித் தடைகள் ஆகியவற்றால் இம்மாநிலம் கல்வியில் பின்தங்கியுள்ளது.

இதையும் படியுங்கள்:
2023ல் இந்தியாவில் அதிக கல்வியறிவு கொண்ட மாநிலம் எது தெரியுமா?
India improve in education

கல்வியறிவில் இம்மாநிலங்கள் நாட்டின் பிறமாநிலங்களைப் போல முன்னிலைக்கு வரவேண்டும். அப்போதுதான் அறிவும், திறமையும் கொண்ட இளைய சமுதாயம் இந்தியாவில் உருவாகும். அந்நிலையில் உலக அரங்கில் இந்தியாவும் ஒரு வல்லரசாக விரைவில் மாறும் எனத் திடமாக நம்பலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com