தெரு நாய்கள் வெறி நாய்களானால்...

வனவிலங்கு ஆர்வலர்கள் நாய்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கூறுமளவுக்கு, வளர்ப்பு நாய்களுக்கும், தெருநாய்களுக்கும் ரேபீஸ் ஊசி போட முன்வருவதில்லை.
street dogs problem
street dogs
Published on
Kalki Strip
Kalki Strip

இந்தியாவில் தெரு நாய்கள் பிரச்னை அதிகம். தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

சென்னையில் மட்டும் லட்சக்கணக்கான தெரு நாய்கள்.

மாநகராட்சி எதையும் உருப்படியாகக் கையாளவில்லை.

சில இடங்களில் மட்டும் நாய்களைப் பிடித்து கருத்தடை சிகிச்சை அளிக்கிறது. தெரு நாய்களுக்குக் கருத்தடை செய்து மீண்டும் பழையபடி தெருவில் விட்டுவிடுகிறார்கள். கால்பங்கு நாய்களுக்குக்கூட கருத்தடை செய்யப்படவில்லை.

தெரு நாய் கடி மிகப்பெரிய பிரச்னை. வெறி நாய் கடித்தால் ரேபீஸ் (Rabies) வந்துவிடும். தகுந்த சிகிச்சை எடுக்காவிட்டால் கடிபட்ட மனிதருக்கும் ரேபீஸ் வந்துவிடும். அவர்கள் படும் கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை. வாட்டர் ஃபோலியோ (Water Phobia) வந்துவிடும். தண்ணீரைப் பார்த்தால் நாய் பயங்கரமாகக் குரைக்கும். தன் முன் உள்ளவர்களைக் கடித்துக் குதறும்.

இதையும் படியுங்கள்:
நாய் கடித்தால் 'இந்த நேரத்துக்குள்' ஊசி போடலைனா உயிருக்கே ஆபத்து!😱
street dogs problem

நீங்கள் வெறி நாய் கடித்த மனிதனைப் பார்த்தால் பயம் கவ்விக்கொள்ளும். மூன்று அல்லது நான்கு ஊசிகள் ஒரு மாதம் முடியும்முன் போட வேண்டும். இல்லை என்றால் அவர்கள் பாடு பெரும் பிரச்னைகளுக்குள்ளாகும்.

வாகன ஓட்டிகள் படும் பாடு பெரிது. இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர்களைத் துரத்தோ என்று தூரத்தி விடும்.

நாய்களுக்கு ரேபீஸ் தடை ஊசி போட வேண்டும்.

சிறு வயது குழந்தைகளையும் நாய் கடித்து, அவர்கள் இறப்பதும் பத்திரிகை செய்தி வருகிறது. பெரியவர்களையும் அவை விட்டு வைப்பது இல்லை.

குன்னூரில் பாஸ்ட்டர் இன்ஸ்டிடியூட் உள்ளது. அங்கு போதுமான அளவு ரேபீஸ் தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது.

தெரு நாய்களுக்கு ரேபீஸ் ஊசி கட்டாயம். முதல் வேலையாக அரசு மற்றும் விலங்கு பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவசியமான இந்தத் தடுப்பூசியை ஒரு நாயையும் விடாமல் போட உதவ வேண்டும்.

நாய் கடித்த உடன் மருத்துவமனை சென்று முதல் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு அடுத்த வாரம். இப்படி ஒரு மாதத்திற்குள் 4 அல்லது 5 ஊசி போட வேண்டும். இப்படி ஊசி போட்டுக்கொண்டால் மட்டுமே நாய் கடித்தவர் பிழைப்பார்..

ரேபீஸ் பற்றி அரசு போதுமான விழிப்புணர்வு அளிக்கவில்லை.

இதையும் படியுங்கள்:
நாய் வளர்ப்பவரா நீங்கள்? இந்த 7 நோய்கள் உங்களுக்கு வரலாம்!
street dogs problem

வனவிலங்கு ஆர்வலர்கள் நாய்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கூறுமளவுக்கு வளர்ப்பு நாய்களுக்கும் தெருநாய்களுக்கும் ரேபீஸ் ஊசி போட முன்வருவதில்லை. ஆர்வமிருந்து பயனில்லை. பெரியவர்களையும், குழந்தைகளையும், ஜனங்களையும் நாய் கடியிலிருந்து பாதுகாக்க வேண்டும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com