தமிழ்த் திறனாய்வு விருது...
தமிழ்த் திறனாய்வு விருது...

தமிழ் எழுத்துக்களில் சுடோகுவா? அட, இது என்ன புது முயற்சி?

னி, யாருடைய துணையுமின்றி தமிழ் எழுத்துக்களை நாமாக, விளையாடியவாறே கற்றுக்கொள்ளலாம். இதற்கான பிரத்யேக மென்பொருள்  தமிழ் அறம் நியூஸ் இணையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் புதுமையை உருவாக்கிய தமிழ் அறம் மின்னிதழுக்கு மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பில் ‘தமிழ்த் திறனாய்வு விருது’ சமீபத்தில்  நடைபெற்ற மராத்திய மாநில எழுத்தாளர் மன்றத்தின் 24வது ஆண்டு விழாவில் வழங்கப்பட்டது. இந்த விருதினை தஞ்சை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன்  வழங்கினார்.

‘தமிழ் எழுத்துக்களோடு விளையாடு’ என்ற மென்பொருள் துவக்க விழா கடந்த ஆண்டு நாசிக் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசித்துவரும் தமிழர்களிடையே இதனை கொண்டு சேர்க்கும் முயற்சியில் தமிழ் அறம் நியூஸ் குழுவினர் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

இந்த விளையாட்டு மகாராஷ்டிராவில் வசித்துவரும் தமிழர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த மென்பொருளை (TAB) அறிமுகப்படுத்திய தமிழ் அறம் நியூஸ் நிறுவனர் அத்தீனா இராமர் அவர்களை கல்கி ஆன்லைன் சார்பாக சந்தித்துப் பேசினோம்...

அத்தீனா இராமர்
அத்தீனா இராமர்
Q

தங்களைப் பற்றியும், இந்த முயற்சி குறித்தும்…

A

மிழ் அறம் மின்னிதழின் இணை ஆசிரியராகிய நான் மும்பை மலாடு பகுதியில் வசித்து வருகிறேன். தனியார் பள்ளியில் கணிப்பொறி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். என்னுடைய கணவருக்குப் பத்திரிகை துறையில் பணியாற்றிய அனுபவம் இருந்ததால், நாங்கள் சொந்தமாக ‘தமிழ் அறம் நியூஸ்’ என்ற ஆன்லைன் செய்தி நிறுவனத்தை தொடங்கினோம். தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழர்களின் ஒற்றுமையை குறிக்கோளாக கொண்டு தொடங்கப்பட்ட எங்களுடைய நிறுவனம் மும்பையிலிருந்து இயங்கி வருகிறது.  வாசகர்களின் அளப்பரிய அன்பு மற்றும் ஆதரவு இருந்து வருகிறது.

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழ் மக்கள், வீட்டில் ஓரளவுக்கு தமிழ் மொழியில் பேசி வருகிறார்கள். ஆனால், தமிழ் எழுத்துக்களை எழுத, வாசிக்க தெரியாது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். அதன்பின்னரே தமிழ் எழுத்துக்களை விளையாடியவாறு கற்றுக்கொள்ளும் வகையில் மென்பொருள் ஒன்றை உருவாக்க முற்பட்டோம். அதன்படி ‘TEV’ (Tamil Ezhutthugalodu Vilaiyaadu) தமிழ் எழுத்துக்களோடு விளையாடு என்ற விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

Q

யாருடைய துணையுமின்றி விளையாடியவாறு தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளீர்கள்! எப்படி? அதுபற்றி கூறுங்களேன்!

‘சுடோகு’ விளையாட்டு
‘சுடோகு’ விளையாட்டு
A

ருங்காலத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாக உள்ளது. நாம் வருங்கால தமிழ் சந்ததியினருக்கு எதையாவது கொடுத்துவிட்டு செல்ல வேண்டும் என்று நானும், என்னுடைய கணவரும் அடிக்கடி பேசிக்கொள்வதுண்டு.

எனக்கும், என்னுடைய கணவருக்கும் ‘சுடோகு’ விளையாட்டு விளையாடுவதில் அதிக ஆர்வம் உண்டு. பெரும்பாலான பத்திரிகைகளில் இந்த சுடோகு விளையாட்டு எண்களில் வந்துகொண்டிருந்தது. அந்த விளையாட்டை டிஜிட்டலிலும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்த விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தால் மன அமைதி ஏற்படுகிறது. மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. நீண்டதூரம் பயணம் செய்யும்போது, நேரம் போவது தெரியாது.

அந்தக் காலகட்டங்களில், இந்த விளையாட்டு, எண்களில் மட்டுமே இருந்தது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த விளையாட்டை தமிழில் கொண்டு வரவேண்டும் என்ற சிந்தனை இருந்து வந்தது.

ஆனால், அதற்கான வசதிகளை எப்படி ஏற்படுத்துவது என்று தெரியாமல் இருந்த நிலையில், நண்பரின் மகன் அசோனியை (வெப் டிசைன் டெவலப்பர்) சந்தித்து பேசினோம். அவர்கள் மூலமாக மென்பொருள் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்க அவர் வெகுநாட்கள் எடுத்துக்கொண்டார்.  நாங்கள் கேட்டபடி அதனை தமிழில் உருவாக்கி தந்தார். பயனுள்ளதாக இருந்தது.

இருப்பினும், இதுகுறித்து டி.ஆர்.டி.ஓ இயக்குநரும், விஞ்ஞானியுமான டில்லிபாபு அவர்களைச் சந்தித்து ஆலோசனை கேட்டோம். அவர் கூறுகையில், நீங்கள் இந்த மென்பொருளை உருவாக்கியதில் மிக்க மகிழ்ச்சி. அதில், ஒலி (உச்சரிப்பு) கொண்டு வாருங்கள். வருங்கால தலைமுறையினர் இதன்மூலமாக எழுத்துக்களை கற்றுக்கொள்வார்கள் என்றார். அவர் கூறியதை ஏற்றுக்கொண்டு மீண்டும் மென்பொறியாளரை சந்தித்து கூறினோம். மீண்டும் காலதாமதம் ஏற்பட்டது.

இதற்காக ஒலியை கொடுக்க வேண்டும் என்பதற்காக நவிமும்பை தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகக்குழு தலைவர் ராஜஸ்ரீ நாகராஜன் அவர்களை தொடர்புகொண்டு தமிழ் எழுத்துக்களின் உச்சரிப்பு ஒலியை பதிவு செய்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டோம். அதன்படி அவரும் எங்களுக்கு பதிவு செய்து அனுப்பினார்.

அதனை துண்டுதுண்டாக வெட்டி மென்பொறியாளர் அற்புதமாக தமிழ் எழுத்துக்களோடு விளையாடு என்ற விளையாட்டை உருவாக்கி தந்தார். 

இதையும் படியுங்கள்:
சூப்பர் சுவையில் மசாலா சப்பாத்தி!
தமிழ்த் திறனாய்வு விருது...
Q

சவால்கள் நிறைந்த பணியாக இருந்திருக்குமே?

A

மாம். கஷ்டமான பணிதான். எண்களையாவது  எளிமையாக ‘இன்செர்ட்’ செய்துவிடலாம். ஆனால், எழுத்துக்களை ‘இன்செர்ட்’ செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

நானும், என்னுடைய கணவரும் சேர்ந்து சுமார் ஆறுமாதத்திற்கு மேலாக இன்செர்ட் செய்தோம். எனது கணவரின் தீவிர தமிழ் பற்றுதான் இந்த விளையாட்டை உருவாக்குவதற்கு காரணமாக அமைந்துள்ளது. தற்போது உயிரெழுத்துக்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. விரைவில், மெய்யெழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள் கொண்டு வரப்படும்.

குழந்தைகள் விளையாட்டு என்று சொன்னவுடன், அவர்களாகவே முன்வந்து அந்த விளையாட்டை விளையாட விரும்புகிறார்கள். பெற்றோரும் முழுமனதுடன் விளையாடி வருகிறார்கள்.

தமிழை படி, படி என்று கூறினால் அவர்கள் மனது சங்கடப்படுகிறது. ஆகையால் விளையாடியவாறே கற்றுக்கொள் என்று கூறியதும், அவர்கள் தங்களை அறியாமலேயே தமிழ் கற்றுக்கொள்கிறார்கள். எங்களுக்கும் மகிழ்ச்சியாக உள்ளது.

இதனை உலக தமிழர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் உதவி புரிவார்கள் என்று நம்புகிறோம். 

இது உலக சாதனையாக கருதப்படுவதால், தமிழ்மொழி மற்றும் எழுத்துக்களை உருவாக்கிய பெருமகான்களுக்கும், நம்மொழியை தொடர்ந்து பாதுகாத்து மக்களுக்கு கொண்டு சேர்க்கும் தமிழ் அறிஞர்களுக்கும் காணிக்கையாக இதை சமர்ப்பிக்கின்றோம். இதில் வரக்கூடிய பெயர் புகழ் அனைத்தும் தமிழ் அறிஞர்களையே சாரும் என்று தன்னடக்கத்தோடு பேட்டியை நிறைவு செய்தார் அத்தீனா இராமர்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com