சிறுகதை: சுமந்த கடன்

Twin sisters
Twin sistersAI Image
நெய்வாசல் நெடுஞ்செழியன்

தொழில்: விவசாயம், விற்பனை பிரிதிநிதி மற்றும் பத்திரிகை பணி பத்திரிகை அனுபவம்: 40 ஆண்டுகள் வளர்தொழில் மாத இதழில் மாவட்ட செய்தியாளராக பத்தாண்டுகள் பணி நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் வணிக கட்டுரைகள் தினத்தந்தி ஆன்மீக பிரிவுக்காக 200க்கும் மேற்பட்ட ஆன்மீக கட்டுரைகள் மற்றும் சப்தகிரி, கல்கி தீபம் போன்றவற்றிலும் ஆன்மீக தினமணிகதிர், தினமலர் வாரமலர், மை விகடன், சிறுகதை டாட் காம் இதழ்களில் 40க்கும் மேற்பட்ட சிறுகதைகள். தினமலர் அமரர் ராமசுப்பையர் நினைவு சிறுகதை போட்டியில் மூன்று தடவை பரிசு, தினமணி கதிரில் எழுதப்பட்ட கதைக்கு இலக்கியச் சிந்தனை பரிசு தற்போது விகடன் குழுமத்தின் பசுமை விகடன், அவள் விகடன், நாணயம் விகடன், குமுதம் குழுமத்தின் மண்வாசனை மற்றும் கல்கி குழும இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். கடலூர் மாவட்ட பாடல் பெற்ற தலங்கள் என்னும் ஆன்மீக நூல், வெற்றிப் படிகள் என்னும் தன்னம்பிக்கை கட்டுரைகள் அடங்கிய நூல், தேடக் கிடைக்கும் திறந்திட வரும் என்னும் தன்னம்பிக்கை கவிதை நூல். என்றும் இனிதாய் வாழ்வோம் என்னும் நாவல் ஆகியவற்றை பிரசுரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Updated on: 

"இங்கே மரகதம் சந்திரமோகன்னு...?"

நெடுநேர தயக்கத்தை உதறி ஆர்த்தி தான் கேட்டாள்.

செய்தித்தாளில் மூழ்கி இருந்த ஆட்டோக்காரன் அதைக் கேட்டு நிமிர்ந்து ஆர்த்தியையும் அவளருகில் நின்ற கீர்த்தியையும் ஆழ்ந்து பார்த்தான்.

"போஸ்டல் டிபார்ட்மெண்ட்ல வேலை செய்றாங்களே அந்தம்மாதானே? ஆமாம் நீங்க அவுங்களுக்கு உறவுக்காரங்களா?"

எதிர்பாராத இந்த கேள்வியால் கீர்த்தி கோப வயப்பட்டாள். ஆர்த்தி இல்லை என்று தலையாட்டினாள்.

"அச்சு அசல அவங்கள போலவே இருக்கீங்க. அதனாலே கேட்டேன், சாரி."

"இந்தா எதிர்ல போகுது பாருங்க அந்த தெருவில் கொஞ்சம் தூரம் போய் வலது பக்கம் திரும்பினா இடது பக்கத்தில் இரண்டாவது வீடு மேற்கு பார்த்து இருக்கும்."

இருவரும் ரோட்டை தாண்டி ஆட்டோக்காரன் சொன்ன சாலைக்குள் நுழைந்து நடந்தனர்.

'வரவேற்பு எப்படி இருக்கும். என்னவெல்லாம் பேசுவார்கள்? அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் மனநிலை இருக்குமா?' என்பதாக ஆர்த்தியின் சிந்தனை ஓடியது.

ஆனால் தூரம் குறைய குறைய கீர்த்தியின் கோபம் அதிகரித்துக் கொண்டே சென்றது. அவளுக்கு அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது.

"எதற்குமே ஒப்புக்கொள்ள மாட்டேன் என்ற நிலையில் அவளிடம் கண்ணீர் விட்டுக் கேட்டேன். நீயும் நானும் காதலித்து கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இருந்தும் என்னை பிடிக்கவில்லை என்று சொன்ன பிறகு, அதை மறுபரிசீலனை செய் என்று உன்னிடம் கேட்க மாட்டேன்.

பிடிக்காதவர்களோடு வாழ முடியாது. காலபரிந்தயம் பிடிக்காத ஒரு முகத்தை பார்த்துக் கொண்டிருக்க எவராலும் முடியாது. எனக்காக நீ இருக்க வேண்டாம், குழந்தைகளை நினைத்தாவது போகாதே.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com