நெய்வாசல் நெடுஞ்செழியன்
தொழில்: விவசாயம், விற்பனை பிரிதிநிதி மற்றும் பத்திரிகை பணி
பத்திரிகை அனுபவம்: 40 ஆண்டுகள்
வளர்தொழில் மாத இதழில் மாவட்ட செய்தியாளராக பத்தாண்டுகள் பணி நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் வணிக கட்டுரைகள்
தினத்தந்தி ஆன்மீக பிரிவுக்காக 200க்கும் மேற்பட்ட ஆன்மீக கட்டுரைகள் மற்றும் சப்தகிரி, கல்கி தீபம் போன்றவற்றிலும் ஆன்மீக
தினமணிகதிர், தினமலர் வாரமலர், மை விகடன், சிறுகதை டாட் காம் இதழ்களில் 40க்கும் மேற்பட்ட சிறுகதைகள். தினமலர் அமரர் ராமசுப்பையர் நினைவு சிறுகதை போட்டியில் மூன்று தடவை பரிசு, தினமணி கதிரில் எழுதப்பட்ட கதைக்கு இலக்கியச் சிந்தனை பரிசு
தற்போது விகடன் குழுமத்தின் பசுமை விகடன், அவள் விகடன், நாணயம் விகடன், குமுதம் குழுமத்தின் மண்வாசனை மற்றும் கல்கி குழும இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். கடலூர் மாவட்ட பாடல் பெற்ற தலங்கள் என்னும் ஆன்மீக நூல், வெற்றிப் படிகள் என்னும் தன்னம்பிக்கை கட்டுரைகள் அடங்கிய நூல், தேடக் கிடைக்கும் திறந்திட வரும் என்னும் தன்னம்பிக்கை கவிதை நூல். என்றும் இனிதாய் வாழ்வோம் என்னும் நாவல் ஆகியவற்றை பிரசுரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.