
அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஆபிரகாம் லிங்கனும், ஜான்.எப்.கென்னடியும் மறக்க முடியாத மாபெரும் தலைவர்கள் என்பதை உலகறியும். இருவருமே, மனித உரிமைகளுக்காகப் போராடியவர்கள். இரண்டு பேருமே பதவியில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டவர்கள்!
இந்த ஒற்றுமையை அனைவரும் அறிவர். இன்னும் பல வியத்தகு ஒற்றுமைகளைக் காணும்போது இதுவெல்லாம் எப்படிச் சாத்தியமென்ற ஆச்சரியம் மேலோங்குகிறது.
லிங்கன் கட்சித் தலைமையேற்றது 1846 ல்! கென்னடி தலைமையேற்றது 1946 ல்!
அமெரிக்க ஜனாதிபதியாக லிங்கன் பொறுப்பேற்ற ஆண்டு 1860! கென்னடி ஜனாதிபதியாக ஆன ஆண்டு 1960!
இருவரும் வெள்ளை மாளிகையில் இருந்து ஆட்சி செய்தபோது, இவர்கள் மனைவியர் தலா ஒரு குழந்தையை இழந்தார்கள்!
இருவரும் சுடப்பட்டது வெள்ளிக் கிழமைகளில்!
இருவருக்கும் குண்டு பாய்ந்தது தலையில்!
இருவரையும் கொன்றவர்கள் தெற்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்!
இத்தோடு முடியவில்லை ஒற்றுமை! இன்னும் இருக்கிறது...
லிங்கனின் செயலர் பெயர் கென்னடி! கென்னடியின் செயலர் பெயர் லிங்கன்!
இவர்கள் இருவருக்கும் பிறகு பதவிக்கு வந்தவர்கள் அமெரிக்காவின் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்!
இருவருக்கும் பிறகு பதவி வகித்தவர்கள் பெயர் ஜான்சன்! லிங்கனுக்குப் பிறகு வந்தவர் ஆன்ட்ரூ ஜான்சன்! கென்னடிக்குப் பின்னர் வந்தவர் லிண்டன் ஜான்சன்!
ஆன்ட்ரூ பிறந்தது 1808 ல்! லிண்டன் பிறந்தது 1908 ல்!
லிங்கனைச் சுட்ட ஜான் வில்கிஸ் பூத் பிறந்தது 1839 ல்! கென்னடியைச் சுட்ட லீ ஹார்வி ஆஸ்வால்ட் பிறந்தது 1939 ல்!
இந்த இருவரின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதினால் வருவது 15 எழுத்துக்கள் (John Wilkes Booth / Lee Harvey Oswald)
முடிந்திடவில்லை ஒற்றுமை! இன்னும் தொடர்கிறது...
லிங்கன் சுடப்பட்டது "போர்ட்"(Ford) என்ற தியேட்டரில்! கென்னடி சுடப்பட்டது 'லிங்கன்' என்ற போர்ட் (Ford) நிறுவனம் தயாரித்த காரில்!
லிங்கனைச் சுட்ட பூத்தும், கென்னடியைச் சுட்ட ஆஸ்வால்டும், விசாரணை முடியுமுன்னரே சுட்டுக் கொல்லப்பட்டார்கள்!
அம்மாடியோவ்! எவ்வளவு ஆச்சரியப்படத்தக்க ஒற்றுமைகள்! இது போன்ற ஒற்றுமைகள் வேறெந்தத் தலைவர்களுக்குள்ளும் உண்டா? வரலாற்று ஆசிரியர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்!