
புகழ்பெற்ற இந்திய கேப்டன் எம்.எஸ். தோனி, கிறிஸ்மஸ் தினத்தன்று புதிய அவதாரத்தில் தோன்றி, மீண்டும் இணையத்தை வென்றுள்ளார். எம்.எஸ். தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அவர் அடிக்கடி தனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார்.
அவரது மனைவி சாக்ஷி தோனி பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், டோனி கிறிஸ்துமஸ் தாத்தா போல் வேடமணிந்து, தனது மனைவி, மகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பதிவு வெளியான இரண்டு மணி நேரத்திற்குள் 500,000 க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது. இதன் மூலம் தோனி கிரிக்கெட்டில் விளையாடாவிட்டாலும் அவருக்கு இன்னும் மவுசு குறையவில்லை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது என்பதை அவரது ரசிகர்கள் மீண்டும் மீண்டும் நிறுபித்து வருகின்றனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகிய போதிலும், தோனி இந்தியாவின் மிகவும் பிரபலமான விளையாட்டு சின்னமாக, ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்துடன் வலம் வருகிறார். தோனி எங்கு சென்றாலும் அவருடன் புகைப்படம் எடுக்கவும், ஆட்டேகிராப் வாங்கவும் ரசிகர்கள் கூட்டம் அவரை பின்தொடர்ந்து செல்ல தயங்குவதில்லை. எனவே, புகழ்பெற்ற கேப்டன் தோனி சாண்டா கிளாஸ் உடையில் இருந்தாலும் அல்லது புதிய சிகை அலங்காரத்தில் இருந்தாலும் ரசிகர்கள் அவரை வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.
சாண்டா கிளாஸ் அவதாரத்தின் முழுதாக மூடிய ஆடையில் தோனி இருந்தபோதிலும், அவரை எளிதில் அடையாளம் காண முடிந்தது. ஏனெனில் அவர் தலைக்கு மேலே 'மஹி' என்ற புனைப்பெயர் கொண்ட தொப்பியை அணிந்திருந்தார்.
தோனி இப்போதெல்லாம் விளையாடும் ஒரே கிரிக்கெட் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஆகும். அங்கு அவர் சென்னை சூப்பர் கிங்ஸை (CSK) பிரதிநிதித்துவப் படுத்துகிறார். உரிமையாளரால் மீண்டும் CSKக்கு தக்கவைக்கப்பட்ட தோனி, வரவிருக்கும் 2025 சீசனில் மீண்டும் மஞ்சள் நிறத்திற்காக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து வருடங்கள் அல்லது அதற்கு மேல் சர்வதேச அளவில் விளையாடாத இந்திய வீரர்களை அன் கேப்ட் (re-introduction) வீரர்களாக தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கும் விதி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், தோனியை வெறும் ரூ.4 கோடிக்கு சிஎஸ்கே தக்க வைத்துக் கொண்டது. தோனி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் ஷர்மா இந்த விதிகளால் பயனடைந்ததன் மூலம் அந்தந்த உரிமையாளர்களால் தக்கவைக்கப்பட்டனர்.
இருப்பினும், ஐந்து முறை ஐபிஎல் வென்ற கேப்டன், தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாடிடம் அணியை ஒப்படைத்ததன் மூலம், CSKயை இனி தோனி வழிநடத்தவில்லை. மேலும் CSK ரவீந்திர ஜடேஜாவை ரூ.18 கோடிக்கு தக்கவைத்துள்ளது.
ஏலத்தில், நியூசிலாந்து பேட்டர்களான டெவோன் கான்வே (ரூ. 6.5 கோடி) மற்றும் ரச்சின் ரவீந்திரா (ரூ. 4 கோடி) ஆகியோரை ஒப்பீட்டளவில் குறைந்த விலை ஒப்பந்தங்களில் திரும்பப் பெறுவது போன்ற சில சிறந்த மதிப்பு கொள்முதல்களை CSK செய்ததுள்ளது.
சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஐபிஎல் 2025ல் மீண்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.