கவிதை: முதுமையின் முகவரி

முதியோர் இல்லம் நோக்கிச் செல்லும் பெற்றோரின் வேதனையையும், வாரிசுகள் செய்ய வேண்டிய கடமைகளையும் விளக்கும் ஒரு சமூக விழிப்புணர்வு நிறைந்த கட்டுரை
முதியோர் | Elderly couple
முதியோர் | Elderly coupleAI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

என் முதற்கண் வணக்கம் -

'முதுமை' எய்திடும் மாந்தருக்கு!

முக்கியமாக கீழ்க்கண்ட ...

'முகவரி'யில் 'வாழும் என் அன்பான-

'மதிப்பிற்குரிய மூத்தக் குடிமக்களுக்கு'!

முகவரி1/3: நீங்கள் வாழும் 'பெற்றப் பிள்ளைகளின் இருப்பிடம்'!

முகவரி2/3: உங்களின் 'சொந்த வீட்டில்' நீங்கள் பெற்றப் பிள்ளைகளுடன் வம்சமுறையே வாழுமிடம்!

முகவரி3/3: பெற்றப் பிள்ளைகள் உங்களை சற்று தள்ளி தங்கவைக்கும் இடமான -'முதியோர் இல்லம்'!

முகவரி எதுவானாலும் - வயோதிகம்

மறவாமல் வந்தடையும் உங்களை தங்கு தடையின்றி!

முகவரி அறிவான் ஆண்டவன், நம்மை ஆள்பவன் அறிவான் மேலிருந்துக்கொண்டு!

முதுமை - தீண்ட வரும் கொடிய நாகமன்று! - அஃது

முழுமனதுடன் கொண்டாடப்பட வேண்டிய 'பழுத்த பழமொன்று'!

'மூது'வது மறவாமல் வாய்க்கும்-

முண்டகன் படைத்த உயிர் அனைத்துக்கும்!

முயன்றாலும் அதற்கு-

முடிவெழுத முடியாது யாரும் முன்னமே!

முன்வந்து வாங்குதலோ- பின்தள்ளி போடுவதோ-

'முதுமை' எனும் காலக்கட்டாய நிகழ்விடம் -

முடிசூடியவனே ஆனாலும் அது எடுபடாது!

முதாரி விளைக்கும் வினையனைத்தையும் -

முறைக்காமல் ஏற்றுக்கொள்ளுவதே சம்பிரதாயம்!

மூர்த்தசமும் மெய் மயிரும் நரையாக மாறுவது நிச்சயம்;

மூலிகையும் மருந்தும் கைவசம் கட்டாயம்;

முழுங்க மாத்திரை நித்திரைக்கு முன்;

முன்பற்கள் விழுந்தால் முகவாயுள் பொய்பல் கட்டும்;

மூன்றாம் காலாக நடை தடியும்;

முழுவதையும் மறப்பதும், மறதியால் தடுமாற்றமும்;

முயலாக ஓடியாடியவன் ஆமையாக மாறுவதும் -

முயலாமையால் தவிப்பதும்;

முதுகெலும்பும் சாய்வதற்கு தேடும் மதில் ஒன்றினை;- இப்படிப்பட்ட

முறியடிக்க முடியாத மேலும்பல வேதனைகள்- இவையாவும்

'முதுமை காலத்தின்' அனுபவிக்க வேண்டிய அம்சங்கள்!

மூட்டுவலி முதுகுவலி முன்னங்கால் வலி-

மூக்குச்சளி இரத்தழுத்தம் சர்க்கரை வியாதி

மூச்சுத்திணறல் என்று...

முடிச்சுப் போட்டும் முடிச்சுப் போடாமலும்

முதுமைக்கு முன்னும் பின்னும்

முன்னுரிமை பெறவேண்டி...இவை

முந்தக்கூடிய உபாதைகள்!

மூக்குக் கண்ணாடி -

மூக்கின் மேல் கண்டிப்பாக உட்கார வேண்டி ;

மூக்குப் பொடியும் சிலரின்-

மூக்கடைப்பிற்கு செய்யும் உபகாரம்!

முள்ளங்கி முளைக்கீரை மணத்தக்காளி

முட்டை முட்டைகோசு

முருங்கை மாங்காய் மாதுளை - இவற்றை

'முணங்காமல்' உணவோடு சேர்த்துக்கொண்டால்-

'முடங்காமல்' சுறுசுறுப்பாக இருக்கலாம்!

முடிந்தால் முட்டுச்சந்து வரை தெம்பாக போய் வரலாம்!

மூட நம்பிக்கை பெருகலாம் அல்லது சிறிது தளரலாம்;- ஏனெனில்

மூடனும் மற்றும் அறிந்தவனும் நம்புவது

முக்கண்ணுடைய சிவனை அல்லது

முருகனை அல்லது திருமால்மருகனை!

மூத்தவர்கள் ஆரோக்கியமாக...

மூத்தவர்கள் திடகாத்திரமாக...

மூத்தவர்கள் ஆனந்தமாக...

மும்முர்த்திகளின் அருளால்-

மனதளவிலும் உடலளவிலும் சிறந்தாலும்;

மூத்தவர்களால் 'முளைத்த' வாரிசுகளால் –

'முளைக்கக் காண்போம்'-பெரும்பாலும்

'முகம் சுளிக்க வைக்கும்' சம்பவங்கள்; -அவைகள்

முற்றிலும் ஏற்கத் தகாத-

'முரண்பாடுகள்'!

முதியோர் | Parents
முதியோர் | ParentsAI Image

மூத்த பிள்ளையும் சரி;

'மொத்த' பிள்ளைகளும் சரி-

'முதிர்ச்சியின் முகவாசல் நுழையும்'...

முத்தமிட்டு வளர்த்த அம்மை அப்பனை-

முப்பது வருடமானதும்-ஒதுக்கிவைத்து;

'முதியோர்' என்ற 'முத்திரை'யை அவர்கள் மேல் பதியவைத்து-

'முதியோர் இல்லம்' நாடுவர் அக்கறையோடு;

முத்தமிட்டு அரவணைத்து வளர்த்த

முதன்மை சொந்தங்களை- தள்ளி வைக்கும் குறிக்கோளோடு!

முறைப்படி வாழ்வோரை-

முதுமையது பயமுறுத்தாது.

மூட்டைத் தூக்கி பிழைக்கும்-

முனுசாமி அகவை அறுபதிலும்;

'முத்தாக' கூலி வேலை செய்வான்;- அல்லது அலட்டும் ஆசாமியான

முத்துசாமி அகவை நாற்பதில்-தன்

முன்நிற்கும் கணினிமூலம் குளிரறையில் வேலை பார்த்தாலும்;

முன்னறிவிப்பின்றி திடீர் மரணம் அடைவான்!

முதற்கண்: 'நல்லொழுக்க வாழ்முறை'ஆனது...

முதுமை காணும்

மூத்தக் குடிமக்கள் யாவரையும்-

முடங்காமல் மேலும் சில ஆண்டுகள் ‘மேன்மைப்படுத்தி’-

முகத்தில் சிரிப்புடனும்;

மனத்தில் திடமுடனும் 'வழிநடத்தி';- அவர்கள் வருடமொரு முறை

'முன்னெச்சரிக்கையாக'மேற்கொள்ளும்-

'முழுஉடல் பரிசோதனையிலும்' நிச்சயமாக ஜெயிக்கவைக்கும் ஒரு சக்தி!

இதையும் படியுங்கள்:
முத்தான மூன்று கவிதைகள்...!
முதியோர் | Elderly couple

மூன்று காலங்களாக தினசரியளவில் பிரிக்கப்படும்...

முழிக்கும் காலமான காலைப்பொழுது;

முழித்திருக்கும் காலமான இடைவேளை;

முடியும் காலமான நித்திரை பொழுது!-அம்

முறையே, நம் வாழ்நாள் காலமும்;

முதலாவதாக - மழலை முதல் வாலிப பருவம்;

முன்னுக்கு பின் தொடரும்- இல்லற வாழ்க்கை படலம்;

முடிவாக - முதுமை 'முளைத்தும்'பின்னம்

'முடிவினை' ஏற்கும் படலம் .

முடியுரையாக...

மூத்த குடிமகனாக மொழிவேன்:

'முக்கியமானது உடல்நலம் பேணல்' என்றாலும்;

'முதன்மை' பெறுவது 'நம் நல்லொழுக்கமே'!

'மூத்தவரவர்' நம்மைப் பெற்றவராவர்- ஏன் வீண்

முரட்டுப்பிடிவாதம் அவர்களிடம்?

முரண்படும் பிடிவாதம் உனக்கு பெற்றவரிடம்?

முதியோரான பெற்றோரைப் பேணி வாழ்தல் -நீர்

"முக்தி அடைய"அது ஓர் அரிய உக்தியாக திகழும் உனக்கு!

முழுமுதற் கடவுளான

மூஷிகவாகனனும்... இளையோன்

முருகனை; - ஞாலமதை மயில் மேல் சுற்றிவர-

முயன்ற ஞானவேலனை; விநாயகன் போட்டியில் ஜெயித்து-

முதல் நிலைப் பெற்று-

முருகனை வென்றது...எவ்வாறு?

இதையும் படியுங்கள்:
ஒரு கதை - ஒரு கவிதை - ஒரு கதைக்கவிதை!
முதியோர் | Elderly couple

மோதகப்பிரியனுக்கு- ஞாலமாக தோன்றியது...

முக்கண்ணுடைய தன் தகப்பனும் அம்மையாரும்- அதனால்

'மூன்று முறை' அக்கறையுடன் வலம் வந்தான் அவர்களை அவ்வாறு!

உன் வாழ்விலும் கட்டாயம் நிகழும் 'தேய்பிறை' நாட்கள்;

உன்னையும் தாங்க கட்டாயம் வேண்டும் உன் 'தலைமுறை' பிள்ளைகள்!

உள்ளன்போடு உறவாடு உன் பெற்றோரோடு!- அதனால்

'உவப்பும்', 'ஊக்கமும்' இணையும் உன் இல்லறத்தோடு!

logo
Kalki Online
kalkionline.com