முத்தான மூன்று கவிதைகள்...!

தமிழ் உணர்வையும், சமூக மாற்றத்திற்கான தேடலையும், வெளிப்படுத்தும் முத்தான மூன்று கவிதைகள்...!
கவிதைகள் | women and soldier
கவிதைகள் | women and soldierAI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

1. வையத்தலைமை கொள்:

கவிதைகள் | A woman with lamp
கவிதைகள் | A woman with lampAI Image

உருவிய சேலையில் உருக்கொண்ட குருச்சேத்திரம் போல்

நானுண்டு, வீடுண்டு வீட்டின் முன்றில் மாடுண்டு

மாற்றார் மனைவி மாக்களும் உண்டு! வேலமாமரங்களுண்டு

காடுண்டு கண்மாய்க்கரையுண்டு – நீருண்டோ?

காணும்திசையெலாம் கண்ணீருண்டு - இவையால்

தலைமை ஏற்கும் தகுதி எனக்குண்டு!

மல்லிகை பெயர் துர்நாற்றமானாலும் நாற்றமே உமிழும்!

நல்தலை மீது நரகல் வீசினும் – நாற்றமெடுக்குமோ?

நற்தலைமை பொருட்டு அதில் வாசம் பிறக்குமே!

அள்ளி பருகிடினும் அவா தீராத அதிகாரமதற்கு அடிப்புகமாட்டேன்!

அப்படி எண்ணம் தோன்றிடின் என்னை தீ கொண்டு மாய்ப்பேன்!

எம்மாற்றமும் என்னுள் உதிக்கும் - அது

நல்மாற்றமாய் நாட்டுக்கு நாற்றம் கொடுக்கும்!

மதுவும் வேண்டா நல்மாதுவும் வேண்டா

சிற்றின்ப இச்சைகள் செரிக்கவே வேண்டும்!

நாம் கூன் உடை தேசத்து குரங்குகள் அல்லவே!

கூர் முனை மழுங்கிய அஃறிணை அல்லவே!

வெந்தணல் விரைந்து வளரட்டும்! எதிர்ப்படும் தலைமுறை தழைக்கட்டும்!

தலைமையேற்றேன் உம்மாலே! தத்துவம் பிறந்தது தன்னாலே!

பின்பற்றுவீர் என் பின்னாலே! இனி எதிர் வரும் தேசம் நம்மாலே!

2. புறநானூற்று வீரன்:

கவிதைகள் | Soldier
கவிதைகள் | SoldierAI Image

குருதிக் குழம்பை சந்தானமாய்

உடல் பூசிக்குளித்தான் மெத்தனமாய்

புறமேனி விழுப்புண் முடிவிலியாய்

இருந்தும் போர்க்களம் புகுந்தான் வக்கிரமாய்!

குதிரை குளம்பொலி அடங்கிற்று

இதையும் படியுங்கள்:
கவிதை: சொக்கம்மா...
கவிதைகள் | women and soldier

புற்றீசல் உடனே கிளம்பிற்று

முகில்தான் இங்கே உடைந்திற்று

குருதி மாமழை சட்டென பொழிந்திற்று!

மதுவை இவனோ தொட்டதில்லை

நலமாதுவின் வாடையில் கெட்டதில்லை

பகைவர் உயிரை விட்டதில்லை

புறமுதுகில் காயம் பட்டதில்லை!

******

3. சிறுத்தையே வெளியில் வா:

கவிதைகள் | woman
கவிதைகள் | womanAI Image

மல்லிகை நாறுமோ! மரிக்கொழுந்து நாறுமோ!

அல்ல அல்ல அல்லவே!

பைந்தமிழர் குருதி வாடை நல்நாற்றம் எடுக்குமேல்

இவ்வள நாட்டுக் குடிகள் மனம் தித்தித்திருக்குமே!

எவ்வெவை நன்மை எவ்வெவை தீமை பகுக்கையில் கண்டேன்

இதையும் படியுங்கள்:
கவிதை: அழகு
கவிதைகள் | women and soldier

பலகோடி களைகள் இருந்தும் ஓங்கும் எம் வாழ்வும் வளமும்!

எம் நாட்டை காதலிக்க தெரிந்த எமக்கு அக்காதலையும்

கனிவையும் பெற காத்திருக்கவும் தெரியும்!

சமணமும் பௌத்தமும் ஆக்கலை ஒழித்ததால் –

சாக்கடை ஏற்றத்தாழ்வு பிறந்தன!

ஹம்பிகாரர்கள் ஆதிக்கத்தால் ஆச்சாரக்காரருக்கு

அறிவேறிபோனதோ? தமிழர்கள் வாழ்வு முடைநாற்றம் வீசுதே!

அவனவன் தாய்முலை அவனவன் பருகுக – மாற்றான்

தாய்முலை பருகுதல் வேண்டி அறுப்பது தீர்வோ ?

நல்லதோர் தலைமையின்கீழ் நற்றமிழர் வாழ்வு செல்ல

நரகம் உமிழ்ந்த கொடுஞ்சிங்கம் நம்மை கருவறுத்ததுவே !

வையம் வியக்கும் தமிழ் சமூகம் சிறக்க கடல் குண்டூசி முனை

உள்ள கடைக்கோடி தமிழர் தம் புது வாழ்வு பிறக்க, -

வன்புணர்வு செய்து பச்சைக்கறி விற்றவர் குலை நடுநடுங்கிட

பச்சைத்தமிழனின் ஆட்சியை நிறுவுதலே சமூகத்தீர்வு காணீரோ!

logo
Kalki Online
kalkionline.com