
எங்கள் நாடு!
எங்கள் தமிழ்நாட்டில்
இரவுபயம் ஏதுமில்லை!
தங்கத் தமிழகமாய்
சரித்திரத்தில் நின்றிலங்கும்!
இரவு முழுவதுமே
எஸ்பிஐ வங்கியிங்கு
திறந்தே இருந்தாலும்
திருட்டேதும் நடக்கவில்லை!
அவசர நகைக்கடனை
அகாலத்திலும் வழங்கவென்றே
அவர்கள் நினைத்தனரோ?
அதுவறியா நம்மக்கள்
உறங்கி விட்டனரோ!
உண்மையில் இந்நிகழ்வு
ஊர் வியக்கும்
நல் நிழ்வுதானே!
‘பகல் நேரத்திலும்
பாங்க் கொள்ளை
துப்பாக்கி முனையில்!’
என்றெல்லாம் செய்திகள்
ஏகமாய்க் சுற்றிவரும்
இந்த நாட்களில்…
திறந்திருந்த எஸ்பியை
சீண்டிக்கூடப் பார்த்திட
யாருமே வராதது…
ஆச்சரியப்பட வைக்கும்
அதிசய நிகழ்வல்லவா?
இனிமேல்தான் நாடெங்கும்
இரட்டைக் கவனத்தை
வங்கிகள் செலுத்தவேண்டும்!
ஆவடிக்கிளை போல
அவசரத்தில் ஊழியர்கள்
பூட்டாமல் செல்வார்களோவென்று
பூதாகாரமாய்த் திட்டமிட்டு
வங்கிகளைக் கொள்ளையர்கள்
வந்தே செக்செய்ய
வாய்ப்புகள் ஏராளம்!
ஏமாறுவோர் உள்ளவரையே
ஏமாற்றுக்காரர்கள் செழிப்பார்கள்!
இதுவே உலகநியதி
இதுவென்றும் மாறாது!