கவிதை - காயம்பட்ட கண்ணாடிகள்!

Women kavidhai
Women kavidhai
Published on
mangayar malar strip

மென்மை என்றாலும் - அதன்

மேன்மை என்றாலும்

பெண்மை என்னும் சொல்லே

பொருந்தும் !

பொறுமை என்றாலும்- மனித

பாரம் தாங்கும் நிலமென்றாலும்

பெண்களே நினைவுக்கு வருவர் !.

அவர்கள் அன்பிற்கு அடிமையாகி .

அளவில்லா பாசத்தையே

அள்ளித் தருபவர்கள் என்று

சொல்லித் தெரியவேண்டியதில்லை !

தார்மீகமாக தலை குனிந்து

தாலியைக் கட்டிக்கொண்ட

தர்மத்திற்காக....

எண்ணற்ற பொறுப்புகளை

இல்லம் தோறும் கடமையாக...

சிரித்த முகத்தோடு

செவ்வனே செயல்படுத்தும்

சீர்மிகு தாய்க்குலத்தை

சீர்வரிசை, சீதனங்களை

முன்னிறுத்தி....

துன்புறுத்தாதீர்கள் !

தன் மனதிலிருப்பதை

தெரியப்படுத்தாமல்,

தன்னை சார்ந்தவர்களின்

தேவையை மட்டுமே

திரும்ப பிரதிபலிக்கும்

கண்ணாடிகள் அவர்கள் !

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் கலை பொக்கிஷம்
Women kavidhai

கண்ணாடிகள் உடைந்தாலும்

காண்பவரின் உருவத்தையே

கண்களுக்கு காட்டுகின்றன.!

காயம்பட்ட அதன் உள்ளத்தை

காட்டுவதில்லை !

ஆகவே அன்பு என்கின்ற

ஆயுதம் மட்டுமே கொண்டு

அரவணைத்து அவர்களை

கவனமாக கையாளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com