
எந்த மாடல் அரசானாலும்
எங்களுக்கு ஓகே தான்!
குடிக்கத் தூய நீரும்
குளிக்க நல்ல தண்ணீரும்
படிக்கச் சிறந்த பள்ளியும்
பாரினில் உயர வேலையும்
கொடுக்கும் எந்த அரசையும்
கும்பிட்டே நாங்கள் போற்றுவோம்!
நீதி மன்றப் படியேறினால்
நிச்சயம் பாரபட்சமற்ற நீதியை
வருடக் கணக்கில் இழுக்காமல்
வாய்தா வாங்கியே ஓட்டாமல்
வழங்கச் செய்யும் அரசுகளை
வாழ்நாள் முழுதும் வரவேற்போம்!
கஷ்டப் படும் தருணத்தில்
காவல் துறையை அணுகினால்
உடுக்கை இழந்தவன் கையாக
ஓடி வந்து உதவினால்
அப்படிப் பட்ட அரசையே
அணு தினமும் கொண்டாடுவோம்!
சேற்றில் காலை வைப்பவர்
செழுமை அரிசி தருபவர்
ஊற்று நீரே பொய்த்தாலும்
உதிரம் சிந்தி உழைப்பவர்
கேட்கும் விலையைத் தந்திடும்
கேண்மை அரசை மறந்திடோம்!
ஆற்று நீரைப் பகிர்ந்திட
அமைதி முறையில் அணுகியே
வேண்டும் பொழுது நீரினை
விரைவாய்ப் பெற்று பயிரினை
காய்ச்சல் இன்றிக் காத்திடும்
கனிந்த அரசைப் போற்றுவோம்!
நாட்டு மக்கள் நலம்பெற
நல்ல பல மருத்துவமனைகளை
வேண்டும் இடங்களில் நிறுவியே
வேதனை தனைப் போக்கிடும்
எல்லா அரசும் எங்களின்
இதயம் தனக்கு அருகிலே!
காட்டு விலங்குகள் அனைத்தையும்
கனிவாய் அவற்றின் எல்லைக்கஎந்த மாடல் அரசானாலும்
எங்களுக்கு ஓகே தான்!