கவிதை: வேண்டிய எல்லாம்… ஒரே இடத்தில்!

Kalkionline Website
Kalkionline Website
Published on

வேண்டிய எல்லாம்… ஒரே இடத்தில்!

ஏறிடும் வெப்பத்தை இனிதாய்த் தாங்கிட…

நாறிடும் வியர்வையை நலமுடன் தவிர்த்திட…

கூடிடும் உறவை குஷிப்படுத்தி மகிழ்ந்திட…

நாடிடும் நாலுபேருக்கு நல்லதே உரைத்திட…

வயதானாலும் வளம் பெற்று நிலைத்திட…

சோர்ந்த உடலையும் கவின்பெறச் செய்திட…

உடலமைப்புக் கேற்ற ஆடைகள் தேர்ந்திட…

தேர்வு எழுதும் சிறுசுகள் தேர்ந்திட…

உஷ்ணத்தைக் குறைக்க உரியபானங்கள் தயாரித்திட…

உணவு வகைகளை உற்சாகமாய்ச் செய்திட…

பெரியோர்கள் பொன்மொழிகளைத் தெளிவாய் அறிந்திட…

உலகம் முழுவதும் உவகையுடன் சுற்றிவர…

புதுப்புது விஷயங்களை நித்தமும் அறிந்திட…

பாட்டி வைத்தியத்தையும் பாங்காய்ப் பின்பற்றிட…

எப்பொழுதும் உடலை இளமையுடன் காத்திட…

நல்ல உறக்கத்தை நாளும் பெற்றிட…

உடல்வலி கால்வலி உடனடியாய்ப் போக்கிட…

உலகப் பந்தில் ஒவ்வொரு நாளும்

நடந்திடும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்திட…

மாதவிடாயைப் பிரச்னையின்றி மாதாமாதம் நகர்த்திட…

சத்தான உணவைச் சரியாய்ச் சாப்பிட…

கீரை வகைகளின் தன்மையை உணர்ந்திட…

ஒவ்வொன்றையும் உரிய விதத்தில் சமைத்திட…

பரிமாறும் விதத்தையும் பக்குவமாய் அறிந்திட…

ஒழுக்கமாய் நடந்து உறவைக் காத்திட…

எல்லோர் மனத்திலும் இனிதாய் இடம்பிடிக்க…

கொண்டவன் உளத்திலும் குழந்தைகள் மனதிலும்

பசுமை நினைவுகளைப் பக்குவமாய் விதைத்திட…

இறப்புக்குப் பிறகும் என்னவெல்லாம் நடக்குமென்று

இந்தப் பிறவிலேயே எளிதாய் அறிந்திட…

அடுத்தவர் முகத்தில் அவர்எண்ணம் படித்திட…

நடைப்பயிற்சி உடற்பயிற்சி ஆசனம் என்று வாழ்ந்திட

வேண்டிய வழிகள் அனைத்தையும்…

அமர்ந்த இடத்தில் அமர்ந்த வண்ணமே

அறியும் உபாயம் அறிவீர் தானே!

நெளிவு சுழிவுகளை நெறிகளை வாழ்வில்

அறிந்து சில சூட்சுமங்களை அறிந்திட்டாலே

வாழ்க்கை சிறக்கும்! வம்புகள் விலகும்!

ஆன்லைன் கல்கியில் அனைத்தையும் அறியலாம்!

உட்கார்ந்த படியே உற்சாகம் பெருக்கலாம்!

வாழ்க்கையை நாமும் வளம் ஆக்கிடலாம்!

பிறவியை இங்கு பெருமைப் படுத்திடலாம்!

இதையும் படியுங்கள்:
கவிதை: இதுதாண்டா இந்தியப்படை!
Kalkionline Website

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com