கவிதை : காதலெனும் பேரெழுதி...

காதல்
காதல் Image credit: கிறிஸ்டி நல்லரெத்தினம்
Published on

சாலையோரத்தில்,

தெருமுனை திருப்பத்தில்,

மைதானத்தில் மரத்தடியில்,

மொட்டை மாடிகளில்,

மலைக் கோவில்களில்

பேருந்து நிறுத்தத்தில்,

சிற்றுண்டி... தேநீரகத்தில்,

உயர் தர சைவ,

அசைவ உணவகங்களில்...

கூடி, சிரித்து,

கோபித்துபின்

கொஞ்சி குலவுகின்ற

காதல் பறவைகளை

காணும் போதெல்லாம்..

நம்முள் எழுகின்ற சிந்தனை இதுவே...

காதல் என்பது அன்பா !

காதல் என்பது நேசமா?

காதல் என்பது உணர்வா!

காதல் என்பது ஈர்ப்பா ?

அது என்னவாக இருந்தாலும்

அதை கடந்து வராதவர்

எவருமுண்டோ ?!

ஆதாம் ஏவாள் காலத்தில்

ஆரம்பித்த காதல் ,

இளமையில் காதல்

முதுமையில் காதல்

மனதோடு மறைந்த காதல்

மணமான பின்பு மறந்த காதல்

இப்படி எத்தனை காதல் ...

இளமையில் தோன்றும்

"ல்தகா சைஆ"யோடு

உரையாடும் காதலர்களை

காண முடிகிறது.!

இதையும் படியுங்கள்:
கவிதை: 'காதல்' - பேருலகின் மிகப்பழைய மொழி!
காதல்

உள்ளத்தை நேசிக்கும்

உன்னதமான காதலை

உணர முடியவில்லையே.!

காதலெனும் பேரெழுதி,

இனம் புரியா…

வாலிப மயக்கத்தில்

வழி மாறி செயல்படாமல்,

எதிர் கொள்ளும்

எதிர்ப்புகளால்

அடைகின்ற இன்னல்களால்

த(டு)டம் மாறிடாமல்...

இருமனம் இணைந்து

திருமணம் செய்து

இல்லறமெனும் நல்லறத்தில்

இனிதாக வாழ வேண்டுமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com