
காதல் தான் பேருலகின்
கனிவான மிகப்பழைய மொழி!
மோதலிலும் இது பிறக்கும்
மௌனத்திலும் இது ஆர்ப்பரிக்கும்!
ஆதாம் ஏவாள் கால
அபூர்வ சைகை மொழி!
இந்த மொழி கற்க
எல்லாருக்கும் உரிமை உண்டு!
சொல்லித் தர என்று
சுகமான பல்கலைக் கழகங்கள்
ஏதும் உலகில் இல்லை
இது கற்றும் வருவதில்லை!
வயது வந்த அனைவருக்கும்
வளமாக இது முகிழ்க்கும்!
சைகையே இதன் எழுத்து
செயல்பாடே இதன் இலக்கணம்!
உலகை உய்விக்கும் உயர்வே
இதன் தனிச் சிறப்பு!
கண்கள் ரெண்டுந் தான்
காதலின் புற வாசல்!
அவையும் பொய்த் தாலும்
அகத்தில் இது உதிக்கும்!
உலகை அழ காக்கும்
உண்மை உணர்வு இது!
சாதி மத பேதங்களை
சரூராய் மாய்க்க வைக்கும்
மந்திர மொழி இது!
மகத்தான உணர்வு இது!
எல்லா நாட்டு இளைஞர்களின்
ஏற்புடைய மொழி இது!
இயற்கையை ரசிக்க வைக்கும்
இனிதான காதல் அது
உள்ளத்தில் உதித்து விட்டால்
உலகம் இங்கே சொர்க்கந்தான்!
ஆணுக்கும் பெண்ணுக்கும்
ஆனை பலம் வந்திடுமே!
ஓடி நன்றாய் உழைத்திடவும்
ஒழுக்கம் கொண்டு வாழ்ந்திடவும்
சாதிக்கும் உறுதி பெற்று
சங்கடங்களை எதிர் கொண்டிடவும்
உற்சாகம் பொங்கச் செய்யும்
உயர் டானிக் காதலன்றோ!
அன்பு ஒன்றே பிரதானமாய்
ஆனந்த வாழ்வு காண
இன்பம் என்ற ஒன்றினையே
ஈகையாய் மனதில் எண்ணி
உண்மை யாய்க் காதலிப்போர்
ஊர் போற்ற வாழ்ந்திடுவர்!
காதல்தான் கடவுள் என்றால்
கச்சிதமாய் அது பொருந்தும்!
இவ்வுலகம் நீளும் வரை
இரண்டுமே அரசு செய்யும்!
மனித இனம் பெருகிடவே
மகத்தான உதவி செய்யும்!
கபடமற்ற உயர் காதலை
காதலரே கடைப் பிடிப்பீர்!
உள்ளந்தான் உயர் காதலுக்கு
உயர்வான நல் இருப்பிடம்!
உடலென்ன நார் சதையாய்
ஒருநாளில் அழிந்து விடும்!