தொடர்கதை: ஈரமில்லாத இதயங்கள் - அத்தியாயம் - 3

Iramillatha Ithayangal - தொடர்கதை
Iramillatha Ithayangal - தொடர்கதைImage Credit: ChatGPT
மைதிலி ராமையா

நான் எழுதிய பல கதைகள், கவிதைகள், நாடகங்கள் வானொலியிலும், ராணி, பாக்யா, குங்குமம், பத்மா, மங்கையர் மலர் மற்றும் மின்னிதழ்களிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. புலனக்குழுக்களில் கதைப்பயிற்றுனராகவும், நடுவராகவும் பணியாற்றி வெற்றியாளர்களை உருவாக்கவும் தேர்வு செய்யவும் உதவி வருகிறேன். எனது சிறுகதைத் தொகுப்புநூலும், கவிதை தொகுப்புநூலும் கின்னஸ் சாதனையாக வெளியிடப்பட்டது. வென்ற விருதுகளில் சில - குறிஞ்சிக் கவி, தமிழினியாள், கண்ணதாசன் விருது, பூவையர் பாமணி, அம்பேத்கார் விருது, காமராசர் விருது, ஆகச்சிறந்த எழுத்தாளர்.

Updated on
Kalki Strip
Kalki Strip

ஈரமில்லா இதயங்கள் அத்தியாயம் - 3

“அந்தப் பகையால ஊருக்கு ஆஸ்பத்திரி கொண்டு வர முயற்சியையும் கிடப்பில போட்டுட்டாங்க இரண்டு தரப்பும். ஆஸ்பத்திரி இருந்திருந்தா உன் தங்கச்சியையும் காப்பாத்தி இருக்கலாம். ஏதோ அந்த சிவராமன் மனுசத்தன்மையோட எதைப் பத்தியும் கவலைப்படாம உதவி பண்ணினதாலதான் உங்க அம்மா உயிரையும் காப்பாத்த முடிஞ்சுது. இல்லைன்னா நீயும் தாயில்லாப் பிள்ளையா நின்னிருக்க வேண்டியதுதான்” என்று சொல்லும் போதே தொண்டை அடைத்தது முருகனுக்கு.

இந்தக் கதையெல்லாம் எத்தனை முறை மகனிடம் சொல்லி இருப்பார் மனிதர் என்பதற்கு கணக்கு வழக்கு கிடையாது. அவனும் சும்மா சொல்லக்கூடாது எத்தனை முறை கேட்டாலும் அப்போதுதான் முதல் முறை கேட்பது போல ரொம்ப சுவாரஸ்யமாக இடையில எந்தக் கேள்வியும் கேட்டு குறுக்கிடாமல் மிக உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருப்பான்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com