

“புதுசா வந்திருக்கிற டாக்டரைப் பத்தி எல்லாரும் ஒரேயடியா பாராட்டித் தள்றாங்க. ஒரு தடவை போய் காட்டிட்டுதான் வருவோமே ஏன் பிடிவாதம் பிடிக்கறீங்க” என்று ஒரு நாள் மனசு தாளாமல் கொஞ்சம் கோபமாகவே கேட்ட யோகத்திடம்,
“வேண்டாம்மா போற இடத்தில யாராவது மனசு நோகப் பேசிட்டாங்கன்னா என்ன பண்றது. மனசில இன்னும் துவேஷத்தை வச்சுக்கிட்டுதான அலையறாங்க” என்று தன் மனதில் உள்ள பயத்தை வெளிப்படையாகச் சொல்லி பிடிவாதமாக மருத்துவமனை செல்ல மறுத்துவிட்டார்.
என்ன செய்யலாம் அப்பாவை எப்படியும் டாக்டர்கிட்ட காட்டனுமே என யோசித்து யோசித்துக் குழம்பிய யோகம் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தவளாக தான் மட்டும் தனியாக ஹாஸ்பிட்டலுக்கு செல்ல முடிவெடுத்து, அப்பாவிடம் வெளியில் போவதாகச் சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டாள்.
ஹாஸ்பிட்டலில் வெளி வராண்டாவில் போடப்பட்டிருந்த பென்ஞ்சில் உட்கார்ந்திருந்த ஒரு முதியவரிடம் சென்று “டாக்டர் வந்துவிட்டாரா?” என்று கேட்டாள்.