

கடைசியாகப் பேசிய ஹெச் ஆர் மேனேஜர் ராவ் அந்த செய்தியை சோகமான முகத்துடன் அறிவித்தார்.
''ஹெட் ஆபிஸிலிருந்து இப்பொழுதான் செய்தி வந்தது.
நம் எம்ப்ளாயீஸ் டெர்மினேஷனை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சொல்லியிருக்கிறார்கள். இன்றைய பொருளாதாரச் சூழல் அறிந்த நாம் அனைவரும் ஒன்றுகூடி ஒரு முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த சோக நேரத்தில அறிவிப்பதைவிட அதை நாளை அறிவிப்பதே மேல் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே?''
''இப்போதே... இப்போதே...''
கூட்டம் கூவியது.
''நாம் அனைவரும்... புரிந்துகொள்ளூங்கள் நாம் அனைவரும் வரும் மாதங்களில் நம் சம்பளத்தில் இருவது சதவீதம் விட்டுக் கொடுக்க சம்மதித்தால் அந்த இருவது சதவீதம் ஆட்களை வேலை நீக்கம் செய்யும் ஆர்டர் திரும்பப் பெறப்படும். சம்மதமா?''
அனைவரும் அமைதியாக இருந்தனர்.
''சம்மதம்.'' முதல் குரல் ஓங்கி ஒலித்தது. ஸ்வேதா.
மீண்டும் சொன்னாள். ''சம்மதம்... சம்மதம்...''
ஒவ்வொருவராகத் தொடர்ந்தனர்.
ஸ்வேதா மீண்டும் ஓங்கிய குரலில் சொன்னாள்.