தேஜூ சிவன்
என் பெயர் சந்தானகிருஷ்ணன். என் மகளின் பெயரையும், மகனின் பெயரையும் இணைத்து தேஜூ சிவன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளை இணைய இதழ்களில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
வாசிப்பும், எழுத்தும் என்னை நிறைவாக வைத்திருக்கின்றன என்பதை இங்கே மகிழ்வுடன் குறிப்பிடுகிறேன். நான் ஆயுள்காப்பீட்டுக் கழகத்திலிருந்து பணி ஓய்வு பெற்று என் சொந்த ஊரான தஞ்சாவூரில் என் கும்பத்துடன் வசித்து வருகிறேன் நிறைய இலக்கியக் கனவுகளுடனும், அதற்கான செயல் முனைப்புடனும்.