தொடர்கதை: Mr.வேம்பு - அத்தியாயம் 6

Mr.Vembu-6 | Couple marriage
Mr.Vembu-6 | Couple marriageAI Image
முருகன்

ஆசிரியர் இயற்பெயர் ஜி.சுப்பிரமணியன். வயது 73. சுமார் நாற்பது ஆண்டுகளாக சிறார்களுக்கு சிறுகதைகளையும் தொடர்கதைகளையும் எழுதி அவைகள் பல சிறார் இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. அது தவிர அன்னாரின் ஏழு கதை புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன இதில் இரண்டு இந்தி சிறார் கதை புத்தகங்கள். ஆசிரியர் அவர்கள் கீழ்கண்ட யு டியூப் சேனல்களையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 1. Suppinithathasiruvarkathaigal 2. Hindi stories – children – suppinidhadha 3. Mannaimurugan touring talkies

Updated on
Kalki Strip
Kalki Strip

Mr.வேம்பு - அத்தியாயம் 6

கிராமமே தோரணத்தால், எங்கும் பிளக்ஸ் போர்டுகள். திரும்பிய இடம் எல்லாம், வாழை மரங்களும் பனை நொங்கு கிளைகளுமாக, அற்புதமாக காட்சி அளித்தது. மாரியம்மன் கோயிலில் அனைவரும் கூடினர். கிராமத் தலைவரும், பெரிய மனிதர்களும் மற்றும் டிரைவர் மாணிக்கத்தின் மகன் அவன் அனைத்து கிராம நண்பர்களும், வாலிபர்களும் கோயிலில் கூடி இருந்தனர். தலைவர் மகன்தான், பகுத்தறிவுக்கு பட்டு வேட்டி கட்டி, பட்டு துண்டு, பட்டு சட்டை எல்லாம் அணிவித்து அழகு படுத்தினான்.

வேம்பு தன் பரிசாக, ஒரு ஐந்து பவுன் தங்க சங்கிலியை, மாப்பிள்ளைக்கு, செயினாக போட்டு விட்டார். பகுத்தறிவு அழுதான். அனைவரும் சமாதானம் செய்து வைத்தனர். பின், பெண் அலங்காரம் கேட்கவே வேண்டாம். அதற்கு கிராமத்தலைவரின் மகள், திருமணத்துக்கு மணப்பெண்ணுக்கு அழகு செய்யும் பெண்ணை அழைத்து வந்து, பட்டுப்புடவை கட்டி, அழகாக கையில் மெகந்தி இட்டு, அவளை ஒரு தேவதையாக அலங்கரித்திருந்தாள். வேம்புவின் மனைவி தான் அணிந்திருந்த இரட்டை வடம் செயினை அவளுக்கு போடுமாறு கொடுத்தாள்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com