தொடர்கதை: Mr.வேம்பு - அத்தியாயம் 8

Mr.Vembu-8 | Couple in the house
Mr.Vembu-8 | Couple in the houseAI Image
முருகன்

ஆசிரியர் இயற்பெயர் ஜி.சுப்பிரமணியன். வயது 73. சுமார் நாற்பது ஆண்டுகளாக சிறார்களுக்கு சிறுகதைகளையும் தொடர்கதைகளையும் எழுதி அவைகள் பல சிறார் இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. அது தவிர அன்னாரின் ஏழு கதை புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன இதில் இரண்டு இந்தி சிறார் கதை புத்தகங்கள். ஆசிரியர் அவர்கள் கீழ்கண்ட யு டியூப் சேனல்களையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 1. Suppinithathasiruvarkathaigal 2. Hindi stories – children – suppinidhadha 3. Mannaimurugan touring talkies

Updated on: 
Kalki Strip
Kalki Strip

Mr.வேம்பு - அத்தியாயம் 8

சேவலின் உரக்க கூவல். ஆதவன் காலையிலேயே வெகு சூடாக உதித்தான். வேம்பு தன் பைக்கை கொடுத்து, கிராமத்துக்கு தன் மனைவி மற்றும் பைந்தமிழுடன் பகுத்தறிவை வழி அனுப்பி வைத்தார். அன்றுதான் முதல் நாள் அவன் வேளான்பணி ஆரம்பமானது.

“அப்பா, காலை டிபன் ரெடி...” என்று பைந்தமிழ், அவர் கையை இழுத்து, அன்புடன் வாஞ்சையுடன் அழைக்கவும், “இரும்மா நான் போய் இலை பறித்து வருகிறேன்” என்று சிறு கத்தியை எடுத்துக்கொண்டு தோட்டத்துக்குச் சென்று இலை பறித்தார்.

‘அய்யோ’ என்றார். கீழே சாய்ந்தார் வேம்பு. சத்தம் கேட்டு பைந்தமிழ் ஓட, அவள் பின்னால் செல்லா ஓட, அவர் பேச்சு மூச்சின்றி கம்பீரமாக பூமித்தாயின் மடியில் படுத்துக்கிடந்தார். அருகில் ஒரு பெரும் கருநாகம் படம் எடுத்து நின்றது.

"அய்யோ அய்யய்யோ. இந்த மாதிரியான ஒரு கருநாகம் தான் என் வாழ்வு சீர்கெடவும் காரணம். இப்போதும் அதே வகை கருநாகம் என் கணவரையும் என்ன செய்ததோ தெரியவில்லையே" என்று ஓவென அழுது, அந்த கருநாகத்தை பெரும் சினம்கொண்டு அடிக்க, அதை விடாமல் துரத்தி அவளும் ஓடினாள். அதற்குள் பைந்தமிழ் அழுத கண்களுடன் நூற்றுஎட்டுக்கு போன் செய்து, பகுத்தறிவுக்கும் போன் செய்தாள்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com