சிறுகதை: மறியல்..!

திருச்சி நெடுஞ்சாலையில் கட்-அவுட் தகராறில் எஸ்.ஐ-யை அறைந்த 18 வயது இளைஞரின் Gen Z இளைஞரின் பரபரப்பான சிறுகதை!
சிறுகதை | gen z youth and police
சிறுகதை | gen z youth and policeImage credit: Gemini AI
ஆனந்த் ஸ்ரீனிவாசன்

ஆனந்த் ஸ்ரீனிவாசன், தபால் துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி 2010-ல் ஓய்வு பெற்றவர். 1985 முதல் சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதி வருகிறார். 75 கதைகள், 5 கதைத் தொகுப்புகளின் ஆசிரியர். தினமலர் வாரமலர் டி.வி.ஆர் நினைவுச் சிறுகதைப் போட்டியில் மூன்று முறை பரிசு வென்றவர்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

காலை ஒன்பது முப்பது மணி. திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அமைந்திருந்த அந்த முக்கியச் சந்திப்பில் வாகனம் எதுவும் நகரமுடியாமல் ஸ்தம்பித்து நின்றது.

காரணம், ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளருக்குப் பிறந்தநாள். அவரது ஆதரவாளர்கள் வீதியின் நடுவே ஐம்பது அடியில் பிரம்மாண்டமான கட்-அவுட் ஒன்றை நிறுவிக்கொண்டிருந்தனர்.

அதனால் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலைச் சீர்செய்யாமல், அங்கே நின்றிருந்த சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் நான்கு காவலர்கள் கட்சிக்காரர்களுக்குப் பாதுகாப்பாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

கூட்ட நெரிசலுக்கு நடுவே, தனது இருசக்கர வாகனத்தைச் தள்ளமுடியாமல் தள்ளிக்கொண்டு முன்னேற முயன்றான் பதினெட்டு வயதான அஸ்வின்.

அஸ்வினுக்கு அது சாதாரண நாள் அல்ல. பன்னிரண்டாம் வகுப்பு முடித்து, குடும்ப வறுமையால் ஐ.டி.ஐ படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, ஒரு தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தில் 'டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக' வேலைக்குச் சேர்ந்து இன்றோடு சரியாகப் பத்து நாட்கள் ஆகின்றன.

கம்பெனி விதிமுறைப்படி காலை பத்து மணிக்குக் துல்லியமாகக் கைரேகை (Biometric) வைக்க வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் தாமதமானால் வேலையை விட்டுத் தூக்கிவிடுவார்கள்.

Loading content, please wait...