சிறுகதை: ஆ.கா.சுப்ரமணி alias ஆயிரம் கார்டுகள் வாங்கிய அபூர்வ சுப்ரமணி!

சாதாரண தபாலில் தொடங்கி உலக நாடுகளை வியக்க வைத்த ஒருவரின் உத்வேகம் தரும் சுவாரஸ்யமான கதை.
சிறுகதை | A man and post man
சிறுகதை | A man and post manAI Image
என்.எஸ்.வி.குருமூர்த்தி

ஐம்பது வருடங்களுக்கும் மேலான எழுத்துலக அனுபவம். 1970 முதல் சிறு துணுக்குகள் எழுதி, கல்கி, குமுதம், விகடன், சாவி, இதயம் பேசுகிறது, குங்குமம், தினமணி கதிர், காமதேனு, இந்து தமிழ் திசை இவற்றிலும், சிறுவர்மணி இதழில் கடந்த 8 வருடங்களாக சுமார் 90 நாடகங்கள் அரங்கம் என்ற பகுதியிலும் பிரசுரமாகி உள்ளன. கல்கி ஆன்லைனில் இது வரை சுமார் 45 கதைகள், கட்டுரைகள் வெளியாகி உள்ளன. ஒரு cartoon படத்துக்கு வசனம் எழுதும் போட்டியில் (இடம் சோழா ஹோட்டல் function - Overseas SANMAR...குழுமம்) ரைட்டர் சுஜாதா அவர்கள் கையால் இரண்டாம் பரிசு ஒரு விழாவில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது .

Updated on
Kalki Strip
Kalki Strip

சுப்ரமணியை திருநாகக்குடியில் 2002 ஆண்டு வரை யாருக்கும் அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் அந்த கிராமத்து சிறிய போஸ்ட் ஆபீஸ் போஸ்ட்மாஸ்டரைக் கேட்டால் கரெக்ட்டாகச் சொல்லிவிடுவார். அது ஒற்றை ஆள் போஸ்ட் ஆபீஸ். அவர் தான் எல்லாமே.... ஸ்டாம்ப் விற்பதில் இருந்து சேமிப்புக் கணக்கு, ரெஜிஸ்டர் தபால் சாதா தபால் பையில் போட்டு முடிந்து கொண்டு சேர்க்கும் வரை..

என்ன ஒரு விசேஷம் என்றால் சுப்ரமணி மட்டும் இல்லை என்றால் அந்த போஸ்ட் ஆஃபீஸ் அங்கு தேவை இல்லை என இழுத்து மூடி இருப்பார்கள்.. அதற்கு உயிர் தருவதே சுப்ரமணி தான்.

அதனால் போஸ்ட் மாஸ்ட்டரும் அவனுக்கு நல்ல மரியாதை தருவார்.. தினசரி விசிட்டர் அவன் தானே! சுப்ரமணி கொல்லையில் விளையும் கொய்யாப்பழம், மாம்பழம், காய்கறிகள், கீரை அவருக்குத் தருவான். வெயில் நேரத்தில் மோர் கொண்டு போய் தருவான் அவருக்கு…

“ யாரு போஸ்ட்கார்டு சுப்ரமணியா? காலையில் தினம் வந்து 50 போஸ்ட் கார்டுகள் வாங்குவார்.. மதியம் அங்கே வந்து அந்தக் கார்டுகளைப் பெட்டியில் போடுவார் அவர்தானே?” என அக்கம் பக்கம் உள்ளவர்களும் அவனை அறிவார்கள்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com