சிறுகதை: புது உறவு!

வாழ்க்கையின் இருண்ட பக்கத்தில் சந்தித்துக்கொண்ட இருவர், அன்பால் எப்படி இணைந்தனர்? அன்பின் வலிமையை உணர்த்தும் கதை..
தமிழ் கதைகள்: A man and a boy
தமிழ் கதைகள்: A man and a boyImage credit: AI Image
வி. சுவாமிநாதன்

எனது தந்தை நிறைய சமூக சிறுகதைகள் எழுதியுள்ளார். குறிப்பாக கல்கியில் எழுதிய 'பிரமை!' மற்றும் 'அவர்கள் காத்திருக்கிறார்கள்!' சிறுகதைகள் கல்கி பரிசு போட்டியில் பரிசு வாங்கியது குறுப்பிடத்தக்கது. தற்போது மங்கையர் மலரில் பிரசுரமான எனது சிறுகதை 'கூண்டு கிளி அல்ல நான்!' என்னுடைய முதல் படைப்பு. தினமலர் வாரமலரில் கவிதைச்சோலை பகுதியில் கவிதைகளூம், தினத்தந்தி குடும்ப மலரில் புதுக்கவிதைகளும் மற்றும் தொகுப்பு நூலில் தன்முனைக் கவிதைகளும் பிரசுரமாகி உள்ளன. நிறைய எழுத வேண்டும் என்கிற ஆசை உள்ளது.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

உச்சி வெயில் சுட்டு எரித்தது. சிமெண்ட் கலைவையும், செங்கல்லையும் அடுக்கி வைத்தபடி, "ஏய்! வேலு, குடிக்க தண்ணி கொண்டு வா" என்று தன்னிடம் வேலை செய்யும் சித்தாள் பையனை பார்த்து சொன்னான் நாற்பத்தைந்து வயதான கொத்தனார் இராமு.

அவன் மனைவி, இருவருக்கும் விட்டுக்கொடுக்கும் மனபான்மை குறைய, குறைய அவர்களுக்குள் வாழ்க்கை முடிச்சுகள் விழ, கடைசி கட்டத்தில் அவனுடன் வாழ விரும்பாமல் அவனைவிட்டு பிரிந்து போய்விட்டாள். சொந்தம், பந்தம் கூட அவனை விட்டு விலகியே இருந்தனர்.

தெரிந்தது கொத்தனார் வேலை! அதில் கிடைக்கும் கூலி அவனுக்கு தேவையான டீ, பீடி, சாப்பாடு, பின் இரவு நேரத்தில் மிதமுள்ள பணத்துக்கு டாஸ்மாக்ல சரக்கு, இரவு சாப்பாடு என்று செலவழித்து விடுவான். பல நேரங்களில் வேலை செய்யும் இடத்திலேயே தங்கி விடுவான். திருமணமான இரண்டு வருடங்களில் அவன் மனைவி அவனை விட்டு பிரிந்து விட, அப்போதிலிருந்து அதிகமானது குடிபழக்கம்; இன்று வரை தொடர்கிறது.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com