

ராஜிக்கு உறக்கம் பிடிக்கவில்லை. எதிர் ப்ளாட்டில் குழந்தை அழுவதும், அக்குழந்தையின் தந்தையான விஜயகுமார் அதை சமாதானப்படுத்துவதும் அவளின் காதுகளில் விழுந்து அவளை இம்சை படுத்தியது. 'இது என்ன கஷ்டம் வீட்டில் மனைவி இல்லாமல் பச்ச குழந்தையை வளர்ப்பது என்ன சுலபமா..' மனம் அங்கலாய்த்தது.
ராஜியின் கணவரும் குழந்தையின் அழுகுரல் கேட்டு விழித்தவர், "ராஜி நீயாவது போய் பார்த்துட்டு வரயா, இப்படி அழுகுது குழந்தை, பெரியவங்க யாரும் இல்லாம கைக்குழந்தைய வளர்ப்பது என்ன லேசா, இப்படி தவிக்கிறாரே இந்த மனுஷன்" என புலம்பினார்.