சிறுகதை: பொறுமையின் சாதனை!

தடைகளைத் தாண்டி சாதித்த இளைஞனின் ஊக்கமளிக்கும் சிறுகதை
சிறுகதை | a man
சிறுகதை | a man AI Image
சௌ. சுந்தர்ராஜ்

சௌ. சுந்தர்ராஜ், ஓசூர் செவன்த் டே அட்வெண்ட்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தமிழ் எழுத்தை நேசிக்கும் எழுத்தாளர். வாழ்க்கையின் சிறு நிகழ்வுகளை சுவையான கதைகளாக வடிவமைத்து, வாசகர்களின் மனதைத் தொடும் படைப்புகளை உருவாக்கி நல்ல சிந்தனைகளைப் பரப்புவதே இவரது எழுத்துப் பயணத்தின் இலட்சியம்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென அவனுடைய தாய் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். தாயின் இழப்பு அவனுடைய மனதை மிகவும் பாதித்தது. வயதான தந்தை மட்டுமே ஆதரவாக இருந்தார்.

வறுமை, தாயின் இழப்பு மற்றும் எதிர்காலம் பற்றிய கவலை அவனை சுற்றி இருந்தாலும், ‘கல்வியே தன்னை உயர்த்தும்’ என்று உறுதியாக நம்பினான். தனது கிராமத்திற்கு அருகில் இருந்த பள்ளியில் மேல்நிலைப் படிப்பை முடித்தான். பின்னர் கோவில்பட்டியில் உள்ள அரசு கல்லூரியில் கணினி அறிவியல் இளநிலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றான். அதன்பின் சிவகங்கை மன்னர் அரசு கல்லூரியில் முதுநிலை கணினி அறிவியல் பட்ட மேற்படிப்பில் சேர்ந்தான்.

அவன் விடுதியில் தங்கி பயிலும்போது சில நேரங்களில் கரண்ட் இல்லாமல் போயிடும். அப்போது நண்பர்களுடன் சேர்ந்து மெழுகுவர்த்திய பத்தவச்சு இரவில் செமஸ்டர் எக்ஸாமுக்குப் படிப்பாங்க; அது மட்டுமல்லாம விடிய காலம் சீக்கிரமே எந்திரிச்சி படிச்சிட்டு தேர்வு எழுதப் போவாங்க. பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டதால், சில நாட்களில் உணவுக்கு பணம் இல்லாத நிலை ஏற்பட்டது. இருந்தாலும் கல்வி உதவித் தொகை மற்றும் தனது விடாமுயற்சியின் மூலம் படிப்பைத் தொடர்ந்தான்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com