அறிவியல் புனைகதை : அடுத்தக்கட்டம்..!

இயந்திர உலகத்தில் தொலைந்துபோன மனிதநேயமும் புதிய யோசனையும் உலகை எங்கு அழைத்துச் செல்கிறது? என்பது பற்றிய அறிவியல் புனைகதை
அறிவியல் புனைகதை | The Earth and the Wayfarer
அறிவியல் புனைகதை | The Earth and the WayfarerAI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

உலகம் அடுத்தக்கட்டம் போக அவதிப்பட்டுகொண்டு நின்றிருந்தது.

சாலையோரம் அமர்ந்து பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த காலத்தின் மீது, புழுதி படிந்த ஆடைகளுடன் அந்த வழிப்போக்கன் வந்து நின்றான். அவன் கையில் ஒரு சிறிய ஊன்றுகோல் மட்டும் இருந்தது.

“ஏன் இப்படி சோர்ந்துபோய் நிற்கிறாய்?” என்று வழிப்போக்கன் கேட்டான்.

உலகம் மெல்லத் தன் கண்களை உயர்த்தி அவனைப் பார்த்தது.

“எல்லா நேரத்திலும் எனக்கு மிக அத்தியாவசியமான தேவை ஒரு பிரகாசமான யோசனை. கணினிக்குப் பிறகு எந்த ஒரு புது யோசனையும் இங்கு யாருக்கும் தோன்றவில்லை. என்னால் மேலே நகரமுடியாமல் தவிக்கிறேன்...” என்று வருத்தப்பட்டது உலகம்.

வழிப்போக்கன் சிரித்தான். அவன் சிரிப்பில் ஒரு விசித்திரமான அமைதி இருந்தது.

“மனிதர்கள் கோடிக்கணக்கான கருவிகளை உருவாக்கிவிட்டார்களே?” என்றான் அவன்.

“உண்மைதான், ஆனால் அவை அனைத்தும் பழைய யோசனைகளின் கிளைகள் மட்டுமே. வேகத்தை அதிகரித்திருக்கிறார்கள், ஆனால் திசையை மாற்றும் விசை யாரிடமும் இல்லை.”

உலகம் சொன்னதில் ஒரு ஆழமான வலி இருப்பதை வழிப்போக்கன் உணர்ந்தான். சுற்றிலும் பார்த்தான். எங்கும் இயந்திரங்களின் இரைச்சல் கேட்டுக்கொண்டிருந்தது.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com