சிறுகதை: அப்பாவால் முடிந்த திருமணம்!

Tamil short Story | Son and parents
Tamil short Story | Son and parentsImg credit: AI Image
முருகன்

ஆசிரியர் இயற்பெயர் ஜி.சுப்பிரமணியன். வயது 73. சுமார் நாற்பது ஆண்டுகளாக சிறார்களுக்கு சிறுகதைகளையும் தொடர்கதைகளையும் எழுதி அவைகள் பல சிறார் இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. அது தவிர அன்னாரின் ஏழு கதை புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன இதில் இரண்டு இந்தி சிறார் கதை புத்தகங்கள். ஆசிரியர் அவர்கள் கீழ்கண்ட யு டியூப் சேனல்களையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 1. Suppinithathasiruvarkathaigal 2. Hindi stories – children – suppinidhadha 3. Mannaimurugan touring talkies

Updated on
Kalki strip
Kalki strip

அப்பா பேப்பரை வைத்துக்கொண்டு அதில் அழகு சாதன விளம்பரத்தை பார்த்துக்கொண்டு இருந்தார்.

"அப்பா.." முகுந்தான்தான் அழைத்தான்.

"என்ன முகுந்தா, சொல்லு" என்றார்.

"ஒரு ஆணுக்கு திருமண வயசு எவ்வளவுப்பா?"

"பெண்ணுக்கு 21 ன்னு ஆட்டோ பின்னால எழுதியிருக்கும். பார்த்திருக்கேன். அப்ப ஒரு வயசு கூட இருந்தாலும் ஆணுக்கு போதும் என்பது என் அபிப்பிராயம்."

"சரிப்பா அப்படி மணக்க இருக்கும் ஆணுக்கு என்ன எல்லாம் தகுதி இருக்கனும்?"

"நல்லா படிச்சி பட்டம் வாங்கி இருக்கனும்.

மாசம் குறஞ்சது ஒன்றையில் இருந்து இரண்டு லட்சமாவது சம்பளம் வாங்கனும். சொந்தமா வீடோ பிளாட்டோ இல்லை போனா போறது ஒரு நிலமோ இருக்கனும்.

நல்லொழுக்கமாக இருக்கனும்.

பெண்ணை கண் போல் பார்த்துக்கனும்.

பையனுடைய தாய் இல்லாட்டி உத்தமம். இருந்தா மத்திமம்தான். இந்த ரேஞ்சுக்குத்தாம்பா மார்கெட் ஓடிட்டு இருக்கு."

"ஏம்பா அப்ப பெண்களுக்கு என்ன தகுதி இருக்கனுமாம்?"

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com