
வீடு வாடகைக்குப் பார்க்க வந்தான் வேலாயுதன். வீட்டு ஓனர் விவேகானந்தன்.
"என்ன வேலை பார்க்கறீங்க…?"
"ஊட்டில வேலை… !"
"எங்கேன்னு கேட்கலை..! என்னவா வேலை பார்க்கறீங்க..?"
"டபுள்ஸ், என்று வந்த வார்த்தையை நாக்கைக் கடித்து அவசராவசரமாய் நிறுத்திக் கொண்டு டாஸ்மாக்கில்..!" என்றார்.
டாஸ்மாக்தான் டபுள்ஸ்னு வந்துட்டுதோ? எதுக்கு வம்பு? "இதுக்கு மேல கேட்க என்ன இருக்கு..? எதுக்கு இங்க, கீழ குடிவரீங்க..?"
"பையனுக்கும் பொண்ணுக்கும் கீழ காலேஜுல இடம் கிடைச்சிருக்கு... அதான் போக வரத் தோதா இருக்குமேன்னு இங்க வீடு பார்க்கிறேன். வாடகை அட்வான்ஸெல்லாம் எவ்வளவு?" என்று கேட்டார்.