தீபாவளி சிறப்பு சிறுகதை - மத்தாப்புச் சிரிப்புகள்..!

தீபாவளி சிறப்பு சிறுகதை: தீபாவளி கொண்டாட்டத்தின் பின்னணியில் ஒளிந்திருக்கும் உணர்வுபூர்வமான உண்மை!
சிறுகதை | Diwali celebration
சிறுகதை | Diwali celebrationImage credit: Chatgpt
செ.ஹரிஷ்

வணக்கம், என் பெயர் செ.ஹரிஷ். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அ.இராமலிங்கபுரம் என்ற கிராமமே எனது ஊர். சிறுவயதிலிருந்தே எனக்கு எழுத்தார்வம் நன்றாக வந்தன. அதனால் பல கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு சில வெற்றிகளையும் பெற்றுள்ளேன். இப்போது எனக்கு வயது 19, கட்டுரையோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் சிறுகதைகள், கவிதைகள், ஜோக்ஸ் என்று எழுத தொடங்கியுள்ளேன். ஒரு சில சிறுகதை போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளேன். மேலும் எனது படைப்புகள் கல்கி இணையதளத்தின் மூலம் மக்களிடம் சென்றடைவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றியை கல்கி குழுமத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன். எனது எழுத்துப் பணி எளிய மக்களுக்கும் புரியும் வகையில் தொடரும் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்!

Updated on: 
Kalki Strip
Kalki Strip

“பாண்டி எந்திரியா… குளிச்சிட்டு புது ட்ரஸ் போடணும்ல்ல.. எந்திரி செல்லம்…”

போர்வையை போர்த்தி தூங்கிக்கொண்டிருந்த பாண்டி, அம்மாவின் சத்தத்தைக் கேட்டு சட்டென்று எழுந்தான்.

பாண்டியின் வாயில் வந்த முதல் வார்த்தையே, “அம்மா வெடி எப்ப வரும்?”

“சுகுமாரு மாமாகிட்ட சொல்லி இருக்கேன்… கொஞ்ச நேரத்துல வெடி வந்துரும்யா..! முதல்ல காட்டுக்கு போயி காலைக்கடனை முடிச்சிட்டு வா”

நல்லெண்ணையை பாண்டியின் தலை ஒழுக வசந்தி தேய்த்துவிட்டார்.

பாண்டி எண்ணெய் வழியும் முகத்தோடு, பல்லைத் துலக்கியபடி வெளியங்காட்டை நோக்கிச் சென்றான்.

அப்போதுதான், பார்வதி குளித்து முடித்துவிட்டு வீட்டிற்குள் வந்தாள்.

“அம்மா என்னோட புது டிரஸ்ச எங்க வச்ச?”

“பீரோக்குள்ள ஒரு மஞ்சக் கட்டப்பைகுள்ள இருக்கும்..! இப்ப போடாத நைட்டிய போட்டுக்கோ.. தம்பி குளிச்சிட்டு வரட்டும் சாமி கும்புட்டுட்டு போட்டுக்கலாம்!”

“சரிமா”

“என்ன பார்வதி முகம் சரியில்லையே.. ஆரம்பிச்சிருக்கா?”

“ஆமா..லேசா பட்ருக்கும்மா..!”

“சரி, அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நைட்டிய போடு போ..!”

Loading content, please wait...