

ஆறுமுகம் அவசர அவசரமாக வேலைகளை முடித்துவிட்டு டூவீலரில் கிளம்பினான்!
கட்சியில் கிளைச்செயலாளர்... மீனவர் அணி வேறு!
கட்சியில் இன்றைய பணி அவனுக்கு கவுண்டிங் முகவர் பணி.
அதற்கான ஆவணங்களை எல்லாம் ஏற்கனவே வேட்பாளரிடம் கொடுத்துவிட்டான்.
இவன் போய் அவரிடம் ஆவணம், பாஸ், பேட்ச் , வாங்கிக்கொண்டு கல்லூாிக்குள் சென்று வாக்கு எண்ணும் பணியை கவனமாக பாா்க்கவேண்டும். அவனது வீட்டிலிருந்து வாக்கு எண்ணிக்கை மையம் ஏறக்குறைய இருபது கிலோ மீட்டர் தொலைவு.
கிளம்பிய பத்து நிமிடத்தில் முகம் தொியாத நபர் ஒருவன் லிப்ட் கேட்டான்! "அண்ணே பிளீஸ் என்னோட மனைவிக்கு ஆஸ்பிட்டலில் ஹாா்ட் ஆப்பரேஷன். அவசரமா டவுனுக்கு போகணும். வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவு, பணம் கொஞ்சம் ஏற்பாடு செஞ்சு எடுத்திட்டு போறேன். பஸ் கிடைக்கலை கொஞ்சம் லிப்ட் கொடுங்களேன்," என்றான்.
"நானு அங்க போகலப்பா கவுண்டிங் மய்யம் போறேன். அதுவரைக்கும் வேனும்னா நீ வரலாம், நானு ஓட்டு எண்ணிக்கை முகவர் பணிக்காக போறேன். சரி சரி ஏறிக்கோ," என்றான் வாகனத்தை நிறுத்திய ஆறுமுகம்.
இருவரும் தோ்தல் முடிவு தொடர்பாக பேசியபடியே வந்தாா்கள்.
மணி காலை ஆறு முப்பது. வாக்குகள் எண்ணும் கல்லூாியின் முன்பாக நாலு கிலோமீட்டர் தூரம் மெயின் காவல்நிலையம். அங்கு கொஞ்சம் துணைராணுவம், வெளியூா் காவலர்கள், வாகன சோதனை செய்ய வாகனங்களை ஓரம் கட்டினாா்கள்.
ஆறுமுகம் பதட்டத்துடன் வாகனத்தை நிறுத்தினான். வண்டி அவனது நண்பனுக்கு சொந்தமானது. அந்த நேரம் அவனுடன் கூட வந்தவன் தான்கொண்டு வந்திருந்த ஹேன்ட் பேக்கை ஆறுமுகம் கையில் கொடுத்து விட்டு நைஸாக எஸ்கேப் ஆனான். காவலர்கள் இவனை காவல்நிலையம் அழைத்து வந்து சோதனை செய்தாா்கள்.
சாா் அது என்னோடதல்ல என்கூட லிப்ட் வந்தவன் கொண்டு வந்தது என்றான். மொழி தொிந்தவர்கள் தொியாதவர் எனபல காவலர்கள் ஆறுமுகத்தை சூழ்ந்தாா்கள். சோதனை செய்த போது அந்த மர்ம நபர் கொடுத்த பையில் லட்சத்திற்கு மேல் பணம், கஞ்சா போன்ற போதை வஸ்து பாக்கெட் இருந்தது!
ஆறுமுகம் எவ்வளவோ அழுதுபாா்த்தான், தோ்தல் பணி, வேட்பாளர் பெயர் என உண்மையைச் சொன்னான்.
யாா் காதிலும் விழவில்லை.
அவனது செல்போன், வண்டி எல்லாம் பறிமுதல் ஆனது. அடி, உதைதான் பரிசாக கிடைத்தது .
எந்த வித பலனுமின்றி தகவல் யாருக்கும் கொடுக்கமுடியாமல் லாக்கப்பில் போட்டபின் எப்ஐஆரும் பலவித சட்டப்பிாிவில் போடப்பட்டது.
ஆறுமுகம் கத்தினான். நாங்க புதுசா கட்சி ஆரம்பிச்சிருக்கோம். நாங்கதான் ஆட்சிக்கு வருவோம். ரிசல்ட் வரட்டும் என கோபமாக கத்தியதற்கும் சோ்த்து தர்ம அடி விழுந்தது .
வாக்கு எண்ணிக்கை முடியட்டும் இவனை நீதிபதி முன்பாக ஆஜர் படுத்தலாம் என முடிவு செய்தாா்கள். மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட காவல் அதிகாாிகளுக்கு தகவல் போனது.
அனைத்தும் கலவரமில்லாமல் நடந்தேறியது. மறுபுறம் ஆறுமுகம் வராத நிலையில் அவசர அவசரமாக வேறு ஒரு நபர் நியமிக்கப்பட்டு பணி தொடர்ந்தது. வேட்பாளரும் விபரம் தொியாமல் இருந்தாா்.
வாக்கு எண்ணிக்கை முடிந்து ரிசல்ட் ஆறுமுகம் சொன்னது போலவே முன்னிலை வர, கிராமமே புது எம்.எல்.ஏ.வை வரவேற்க நான்கைந்து வேனில் வந்தது!
ஆறுமுகம் மேட்டர் சோஷியல் மீடியாவில் கசிந்தது, அதைக்கண்ட அவனது ஊா்க்காரர்கள், கட்சிக்காரர்கள் காவல்நிலையம் வந்தாா்கள்.
சிலர் வெகுண்டெழுந்தாா்கள்!
பின்னர் அனைவரும் கிளம்பி மாலை மரியாதை செய்து எம் எல் ஏ விடம் நடந்ததைக்கூறி, அவரையும் மாவட்ட ஆட்சியர், மற்றும் எஸ்பி ஆகியோரையும் காவல்நிலையம் அழைத்து வந்து சமரசம் பேசி, ஆறுமுகத்தை வெளியே கொண்டு வந்தாா்கள்.
பின்னர் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ அனைவரிடம் பேசினாா். வெற்றியடைந்து மக்கள் பணி செய்வதற்குள் இப்படி ஒரு தேவையில்லாத நிகழ்வு, தேவையா? ஜனநாயக நாட்டில் ஒருவரே எப்போதும் வெற்றிவாகை சூடமுடியாது. காலசக்கரம் சுழலும். அதனால அதிகாாிங்க ஒரே நோ்கோட்டில போங்க என சொல்லிவிட்டு பொதுமக்களுடன் கிளம்பினாா். இருவாரம் கழித்து அந்த காவல் நிலையத்தில் அனைவரும் புதுமுகமாக பணிபுாிந்தாா்கள்.
ஆறுமுகத்திற்கு கட்சியில் பொிய பொருப்பு வழங்கப்பட்டது.
ஆறுமுகத்துடன் லிப்ட் கேட்டு வந்தவன் எதிா்கட்சியால் அனுப்பப்பட்ட நபர் என விசாரணையில் தொிய வந்தது!