சிறுகதை: இரட்டை கார்த்திகை தீபம்!

குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்த தம்பதியினரின் வாழ்வில் நடந்த எதிர்பாராத திருப்பம் பற்றிய சுவாரஸ்யமான சிறுகதை
சிறுகதை | A couple put Karthigai lamps at entrance of their home
சிறுகதை | A couple put Karthigai lamps at entrance of their homeAI Image
செ.ஹரிஷ்

வணக்கம், என் பெயர் செ.ஹரிஷ். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அ.இராமலிங்கபுரம் என்ற கிராமமே எனது ஊர். சிறுவயதிலிருந்தே எனக்கு எழுத்தார்வம் நன்றாக வந்தன. அதனால் பல கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு சில வெற்றிகளையும் பெற்றுள்ளேன். இப்போது எனக்கு வயது 19, கட்டுரையோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் சிறுகதைகள், கவிதைகள், ஜோக்ஸ் என்று எழுத தொடங்கியுள்ளேன். ஒரு சில சிறுகதை போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளேன். மேலும் எனது படைப்புகள் கல்கி இணையதளத்தின் மூலம் மக்களிடம் சென்றடைவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றியை கல்கி குழுமத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன். எனது எழுத்துப் பணி எளிய மக்களுக்கும் புரியும் வகையில் தொடரும் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்!

Updated on
Kalki Strip
Kalki Strip

அலைபேசியின் ஒலி அடித்துக் கொண்டே இருந்தது…

பக்கத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்த பசுபதி, “அண்ணே போனு அடிச்சுகிட்டே இருக்கு.. என்னன்னு பாருங்க..!”

இரும்புக் கதவிற்கு வெல்டிங் வைப்பதில் மும்முரமாக இருந்த கணேசன், பசுபதி கூறுவதைக் கேட்டுப் போனை எடுத்தார்.

எதிரே மனைவி, “ஏங்க.. வரும்போது இருபது அகல் விளக்கும், அரைலிட்டர் நல்லெண்ணெய்யும் வாங்கிட்டு வந்துருங்க..! இன்னைக்கு மட்டும் கொஞ்சம் சீக்கிரம் வந்துருங்கங்க.. ஒரு விஷயம் இருக்கு..!”

“சரி.. சரி.. வாங்கிட்டு வரேன்.”

கணேசன் போனை வைத்துவிட்டு, மீண்டும் வேலையை பார்க்க ஆரம்பித்தார்.

மாலை 5 மணி என்ற மணிச் சத்தம் பக்கத்தில் இருந்த, பூமாரியம்மன் கோவிலில் ஒலிக்க ஆரம்பித்தது.

கணேசன் நேராக முதலாளியிடம் சென்று, “அண்ணே.. இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்குப் போய்க்கிட வா..?”

“சரி கணேசா..!”

“அண்ணே அப்புறம் வீட்டுக்கு கொஞ்சம் சாமா வாங்கணும்.. ஒரு 500 கிடைக்குமா..? இந்த வாரம் சம்பளத்துல பிடிச்சுக்கோங்கண்ணே..!”

“சரி இந்தா.”

சாப்பாட்டுக் கூடையை கையில் எடுத்துக்கொண்டு, சைக்கிளின் முன்புறம் மாட்டி வீட்டிற்குப் புறப்பட ஆயத்தமானார் கணேசன்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com