
பகல்தூக்கத்திலும் கனவு வரலாம். வந்தது. முருக பக்தனான வாசுதேவனுக்கு! அவன் மனசு, எப்போதும் முருகனைப் பற்றிய பாட்டே பாடிக் கொண்டிருக்கும்.
‘மனமே நீ முருகனின் மயில் வாகனம்..’ இந்தப் பாட்டு அவன் உள்ளத்தில் ஒலிக்காத நாட்களில்லை. முருகன் மேல் அவ்வளவு பிரியம் அவனுக்கு.
அன்று, பகல் தூக்கத்தில் கனவு வர, தூக்கி வாரிப்போட்டு எழுந்தான். முருகன் நேரில் அழைப்பதாகத் தோன்றியதால் வந்த வினை.
"கடவுள் கனவில் பேசுவாரா?"
"பேசுவார்." என்கிறார்கள் சிலர்.
"பேசினார்," என்பதுதான் வாசுதேவன் பதில்!
அன்று முடிவு எடுத்தான் ‘இனி, கோழிக்கறி தின்பதில்லை’ என்று.
"ஊரறிய சைவம்., உள்ளத்தால் அசைவம். நீயெல்லாம் சைவனா?" வசை பாடாதவர்கள் இல்லை!
என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும். யார் என்ன சொன்னால் என்ன? கடவுள் என்ன சொன்னார் என்பதுதானே இப்போது முக்கியம்?
‘ஆத்தா ஆடு வளர்த்துச்சு... கோழி வளர்த்துச்சு… ஆனா, நாய் வளர்த்தலை! இந்த சப்பாணியைத்தானே வளர்த்துச்சு?' ன்னு மயிலிடம் கேட்ட பதினாறு வயதினிலே படக் கமலாக வேலவனோடு பேசினான் வாசுதேவன்.
பதிலுக்கு அவன்….