
காலை 7 மணி. உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை உசுப்பினால் வீறிட்டு கத்தி அழுவது போல படுக்கைக்கு அருகிலிருந்த செல்போன் விழித்து கொண்டு கத்த ஆரம்பித்தது. செல்போனையும் என்னையும் எழுப்பியது மலேசியாவிலிருந்து சிரோன்.
“ஆ… சொல்லுங்க சிரோன் குட் மார்னிங்”
“ரகு கொஹீவல இருந்து யாராவது கால் பண்ணாங்களா?”
“இல்ல சிரோன், யாரும் எனக்கு கால் பண்ணல. ஏன் என்ன ஆச்சு?”
“உங்க ஐயா இறந்துட்டாரு ரகு”
“என்ன சிரோன் சொல்லுறீங்க. எப்படி”
“காலையில ஐயா பூ பறிக்க போயிருக்காரு போல. எங்க டேவிட் மாமா கடை திறக்க 6 மணிக்கு வீட்டுல இருந்து கிளம்பி போகும் போது நம்ம லேன் வளைவுக்கிட்ட இருக்க பூ மரத்து பக்கத்துல ஐயா விழுந்து கிடந்தத பார்த்து உங்க விஜி மாமாகிட்ட சொல்லியிருக்காரு. உங்க மாமா ஆஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு போனதுக்கு, முன்னமே இறந்து போயிட்டாருனு டாக்டர் சொன்னராம். நெஞ்சுவலியாம் ரகு. எங்க அம்மா இப்பதான் எனக்கு கால் பண்ணி சொன்னாங்க”