சிறுகதை: காணவில்லை!

தொலைந்து போனது தந்தை மட்டுமல்ல, இன்றைய வேகமான உலகில் நாம் தொலைத்துவிட்ட புரிதலும், பாசமும் தான் என்பதை இந்தக் கதை அழகாகச் சொல்கிறது.
Tamil Shorty Story | A man searching Father
Tamil Shorty Story | A man searching FatherAI Image
மதுரை முரளி

மதுரை முரளி. பன்முக எழுத்தாளர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கதை, கவிதை, கட்டுரை, நாடகங்கள் எழுதி வருகிறேன். மதுரை வானொலியில் 30 நாடகங்கள் ஒளிபரப்பாகியுள்ளது. 400 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளேன். பல பிரபல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. தினமலர் "என் பார்வையில்" கட்டுரைகள், மூன்று புதுக்கவிதைப் புத்தகங்கள் உட்பட 12 புத்தகங்கள் வெளியிட்டுள்ளேன். www.pustaka.co.in ல் 11 வலைதள மற்றும் 5 ஒலிப்புத்தகங்கள் உள்ளன. சமூகநல சிந்தனைகளே என் நோக்கம்."

Updated on
Kalki Strip
Kalki Strip

"அஜந்தா" தனியார் கம்பெனியில் கடிகாரம் மாலை 5 மணியை இசைத்து அறிவிக்க, காலையில், இளவரசனுக்கு மேனேஜர் கொடுத்த சுறுசுறுப்பு 'கீ' இன்னமும் அவனை இயக்கியது அதிவேகமாய்.

'கண்ணுக்கு மை அழகு' மனைவி பத்மாவின் அலைபேசி அழைப்பு.

“ஹ.. என்ன பத்மா?”

“எ.. என்னங்க, இப்பத்தான் நான் பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு வந்தேன். வீட்டு முன்வாசல் திறந்து கிடக்குது. உங்கப்பாவைக் காணும்” சன்னமான குரலில் கூற,

“அ.. அப்பாவைக் காணோமா? அய்யய்யோ. மீண்டும் இரண்டாம் முறையா?” ‘குப்’பென ஏறிய இரத்த அழுத்தத்தில் சற்றே நடுங்கினான் இளவரசன்.

“ஆமாங்க. நல்லவேளை நான் முன் யோசனையா அவரை முன்அறையிலேயே விட்டுட்டு, மற்ற அறைகளை பூட்டிட்டு போனேன். இல்லேன்னா, வீட்டில பொருட்கள் எல்லாமே களவு போயிருக்குமே?” கவலையாய் பத்மா.

“நீ.. நீ, என்ன பேசற? இப்ப அப்பா முக்கியமா? பொருட்களா? போனை வை. நான் முன் அனுமதி கேட்டுட்டு, உடனே வீட்டுக்கு வரேன்”. அடுத்த அரைமணியில் வீட்டில்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com