சிறுகதை: கருவேல மனிதர்கள்!

Karuvelam maram story
Karuvelam maram story
கோவிந்த் மனோகர்

I am a retired Government Servant worked for Indian Audit and Accounts Department. Living in Chennai am Interested in Reading, Writing, Listening/Watching feel good movies, music especially old cartoons. I want to share my thoughts I get for living easily/peacefully irrespective of Age and environment. Be just to reach anywhere.

Updated on
Kalki Strip
Kalki Strip

மாலை நேரம். காற்று வீசியது. ஆனால் அந்த காற்று மண்வாசனை இல்லாமல்… ஒரு வறட்சியின் வாசனையோடு வந்தது.

அருண் அவன் ஊரில் இருந்த ஏரிக்கரைப் பாதையில் நடந்தான்.

ஒருகாலத்தில் அந்த ஏரி நீர் நிரம்பி இருந்தது. குழந்தைகள் குளித்தனர், மாடுகள் குடித்தன, ஈரக்காற்று வீசியது... இப்போது..?

கருவேல மரங்கள். அடர்ந்த பச்சை. ஆனால் உயிர் இல்லாத பச்சை.

“இது காடு மாதிரி இருக்கு இல்ல?” என்று கேட்டான் அவன் நண்பன் கார்த்திக்.

அருண் சிரிக்கல. “காடு இல்லடா… இது… கவ்வுறது. விழுங்குறது. காடுன்னா உயிர்கள், பல்வகை மரங்கள் அதாவது சமநிலை. ஆனா கருவேலம் அப்படியில்ல. ஒரே இனமா பரவி மற்ற உயிர்களை ஒடுக்குறது. அதனால அது ‘காடு’ மாதிரி தெரியலாம். ஆனா காடில்ல. அது 'வாழ்வை சாப்பிடுறது'."

அவன் தாத்தா சொன்ன வார்த்தை அவன் நினைவுக்கு வந்தது, “இந்த மரம் நிழல் குடுக்கும்… ஆனா உயிரை எடுக்கும்.” அப்போ அவன் புரிஞ்சுக்கல. இப்போ புரியுது. அது ஒரு விலைமதிப்பில்லா அவதானிப்பு.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com