சிறுகதை: குற்றவாளி

தவறான புரிதல்கள் ஒரு உயிரை எப்படி பலிவாங்குகிறது? ஒரு இளைஞனின் கடைசித் தவிப்பு!
Student | சிறுகதை
Student | சிறுகதைAI Image
சாந்தி ஜொ

என் இயர்பெயர் ரகுநாத், நாமக்கல் மாவட்டம். தற்போது கொழும்பு, இலங்கையில் வசிக்கும் நான் 'சாந்தி ஜொ' என்ற பெயரில் கதைகள் எழுதுகிறேன். சிறுவயதில் என் கையை பிடித்து நூலகத்திற்கு கூட்டிச்சென்ற என் அப்பா மறைந்தாலும் அவர் காட்டிய புத்தகங்கள் தான் எனக்கு வாழ வழிகாட்டுகின்றன. நான் எழுத்தாளனாக உருவாக காரணமான எழுத்தாளர்கள் அகிலன், அலெக்ஸ் ஹேலி அவர்களும் தான். வாசிப்பை ஊக்குவிப்பதற்க்காக வசிக்கும் தெருவில் நூலகம் அமைக்க புத்தகங்களை சேகரித்து கொண்டு இருக்கிறேன்.

Updated on

அப்போதுதான் நானும் பருவமடைந்தேன்.

பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எட்டாம் வகுப்பிலே அப்பா ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் என்னை சேர்த்து விட்டார். அந்த பள்ளிக்கூடத்தின் விடுதியின் விதிமுறைகள் மிகவும் கடுமையாக இருந்தன. எங்கள் பள்ளிக்கூடம் பத்து ஆசிரிய இயக்குனர்களால் நடத்தப்படுவது என்றும், அந்த பத்து ஆசிரியர்களுக்கும் தலைமையாசிரியருக்கான அதிகாரம் இருக்கிறது என்பதையும் பள்ளியில் சேர்ந்த புதிதில் வகுப்பில் என் அருகில் அமர்ந்திருந்த குமாரன்தான் எனக்கு விளக்கப்படுத்தினான். பள்ளியில் பெரும்பாலனோர் விடுதியில் தங்கி படிப்பவர்கள். அதிகளவில் விடுதியில் தங்கி மாணவ மாணவிகள் படிப்பதற்கு காரணம் ஆசிரிய இயக்குனர்கள்தான். பள்ளியின் விளம்பர பேனர்களில் விடுதி வசதியும், பத்து ஆசிரிய இயக்குனர்களால் நடத்தப்படும் பள்ளி என்றும் பெரிதாக போடப்பட்டிருக்கும்.

விடுதி மாணவர்களின் தினசரி அட்டவணை, காலையில் 5 மணிக்கு கட்டாயமாக எழும்ப வேண்டும். 6 லிருந்து 8 மணி வரை படிக்கவும், 8 லிருந்து 9 மணி வரை காலை உணவும் சாப்பிட்டு 9 மணிக்கு பள்ளியின் ஆரம்ப மணி ஒலிப்பதற்கு முன் வகுப்பறைக்கும் செல்ல வேண்டும்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com