
சென்னையின் பிரபல மருத்துவமனை அது.
கல்யாண் வசந்த் என்ற பிரபல நடிகர், இசிஆர் ரோடில் தன்னுடைய காரை ஓட்டிச் சென்ற போது, அந்த கார் விபத்துக்கு உள்ளாகி அதில் அவர் அடிபட்டு, ஐசியூவில் அனுமதிக்கப் பட்டு இருந்தார். அவர் சமீபத்தில் சொந்தமாய் எடுத்த ஒரு படம் படு தோல்வி அடைந்து, அதனால் அவர் பெரிய கடனில் இருப்பதாகவும், அந்த மனக் குழப்பத்தில் அவர் காரை ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் சொன்னார்கள். ஒரு வாரம் ஆகிவிட்டது. நினைவு இன்னும் திரும்பவில்லை என்றும் சொன்னார்கள்.