சிறுகதை: தோசை... ஆசை!

பழைய மாவை காலி செய்யும் சாதாரண இரவு உணவு, கமலா தன் பசியை மறைத்து குழந்தைகளுக்கும் கணவருக்கும் முன்னுரிமை தரும் தியாகமாக மாற, அதை ராமன் பாசத்துடன் உணர்ந்த உண்மை
Family bonding story
Family bonding story in tamil image credit: AI
நாமக்கல் எம்.வேலு

கார்ப்பொரேஷன் வங்கியில் எழுத்தராக சேர்ந்து உதவிப் பொது மேலாளராக ஓய்வு பெற்றேன். 1988ல் நாமக்கல் கிளையில் இருக்கும்போது எழுத ஆரம்பித்து இதுவரை 200 கதைகளுக்கும் மேலாக எழுதியுள்ளேன். தினமலர்-வாரமலர், கதைமலர், தீபாவளிமலர், குமுதம், விகடன், குங்குமம், சாவி, மற்றும் கல்கி, மங்கையர்மலர், கோகுலம், சஹானா இணைய இதழ்களிலும் எழுதி உள்ளேன். தினமலர்-வாரமலரிலும் மங்கையர்மலர் - ஜெயஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதைப் போட்டியிலும், சஹானா இணைய இதழிலும், அன்னை குருபாக்கியம் நினைவு சிறுகதைப் போட்டியிலும் பரிசு பெற்றுள்ளேன்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

tamil-short-story

"என்ன டின்னர் கமலா இன்னிக்கு?" என்றபடி கிச்சனுக்குள் நுழைந்தார் ராமன்.

"வேறென்ன, தோசைதான். பழைய மாவு கொஞ்சம் இருக்கு, அதை காலி பண்ணிடனும் இன்னிக்கு," என்ற கமலா, "ஏன், வேறே ஏதாவது வேணுமா?" என்றும் கேட்டாள்.

"ச்சேச்சே... ஜஸ்ட் கேட்டேன். நீ எது பண்ணினாலும் சரிதான்," என்று சிரித்தார் இவர்.

"சரி, மணி எட்டாகுது. தோசை ஊத்தவா?" என்றாள் அவள்.

"ஊத்து, ஆனா சட்னி போடவேணாமா?" என்றார் இவர்.

"அதெல்லாம் முன்னேயே அரைச்சு வச்சாச்சு," என்று அவள் சொல்ல, அதே சமயம் அறைக்குள்ளிருந்து செல்வி குரல் கொடுத்தாள், "அம்மா, எனக்கு பசிக்குதுமா!" என்று.

உடனேயே, "அம்மா, பாபுக்கும் பசிக்குதாம். நாங்க புக்கை மூடி வச்சிட்டோம், டைனிங்கிற்கு வரப்போறோம்," என்றபடியே எழுந்து வந்தாள் அவள். கூடவே பாபுவும் வந்தான்.

"நான் தோசைக்கல்லையே இப்போத்தான் அடுப்புலே ஏத்தப் போறேன். அது சூடேறி, தோசை ஊத்தி, கொஞ்ச நேரமாவது ஆகாதா? உடனே டைனிங்கிற்கு வந்துட்டா எப்படி?" என்று அவர்களைச் செல்லமாய்க் கடிந்து கொண்டாள் கமலம்.

"சரிம்மா, அதனாலென்ன? அதுவரை டி.வி. பார்க்கறோம்," என்றுவிட்டு, "அப்பா, டி.வி. போடுங்கப்பா ப்ளீஸ்..." என்றும் கேட்டுக்கொண்டாள்.

அவர் டி.வி.யைப் போட்டார். செய்தி சேனல் வந்தது. அதை மாற்றிக்கொண்டே வந்து காமெடியில் நிறுத்தினார். பிள்ளைகளுக்கு அதுதான் பிடிக்கும்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com