

வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்றாகத்தான் இருக்கிறது. வளர்ந்த பின்தான் அது வெவ்வேறாக மாறுகிறது. அந்த மாற்றத்திற்குக் காரணம் அவர்களுடைய கோட்பாடுகள், அவர்களுடைய கலாச்சாரப் பின்னணிகள் மற்றும் அவர்களுடைய வாழ்வியல் வழிகாட்டல்கள்.
***********
குடந்தை 'கிருஷ்ணபவன்'இல் இருந்து தினமும் சிற்றுண்டி சாப்பிட்டு, அதன் அருகே இருக்கும் சாரங்கபாணி கோயில் கோபுரத்தைக் கும்பிட்டு ‘ஓம் நமச்சிவாய’ என்று சொல்லி, பக்கத்துத் தெருவில், தான் வேலை பார்த்த வங்கிக்கு செல்வது வாடிக்கையாக இருந்தது பாஸ்கரனுக்கு.