
வீட்டுக்குள்ளே வந்த விக்னேஷ் "என்ன ஒரு மாதிரி சோகமா உக்காதிருக்கீங்க?! எதாவது பிரச்சனையா?! என்னால உதவமுடியும்னா எதாவது செய்யறேன். சொல்லுங்க! நீங்க இப்படி இருந்து பார்த்ததில்லையே?!"என்றார் ஆதரவாக.
'இப்படி அடுத்தவனுக்காக அக்கறைகாட்டற ஒரு ஜென்மம் துணைக்கு இருந்தா, இருக்குன்னா ஒராயிரம் ஜென்மம் எடுக்கலாம் இந்த உலகத்துல!’ மனசுக்குள் நினைத்துக் கொண்டார் மாதவன்.
நிமிர்ந்து உட்கார்ந்து விக்னேஷ்வரனையும் எதிரில் அமரச் சொல்லிவிட்டு, "ஒண்ணுமில்லை, இந்த மனுஷ வாழ்க்கையை நினைத்தாத்தான் மலைப்பா இருக்கு? என்ன வாழ்ந்திருக்கோம்? என்ன பண்ணப் போறோம்?! என்று ஒரே கவலையாவும் பயமாவும் இருக்கு!" என்றார்.