சிறுகதை: தாய்!

Family
Family - Tamil Short StoryAI Image

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on
Kalki Strip
Kalki Strip

ரகு நான்கு நாட்கள் அலுவலகத்திற்கு விடுமுறை போட்டிருந்தான். இன்று விடுமுறை முடிந்து வேலையில் சேர்ந்தான். தன் டேபிளில் குவிந்திருந்த கோப்புகளை ஒவ்வொன்றாக எடுத்து விரைவாக பணி செய்ய ஆரம்பித்தான். மனம் மட்டும் அப்பாவை சுற்றியே வந்து கொண்டிருந்தது.

சிறுவயதில் அம்மாவை பறி கொடுத்த போது ஆறாவது படித்துக் கொண்டிருந்தான். அம்மாவிற்கு அடிக்கடி வயிற்று வலி வரும். அது ஒரு நாள் அதிகமாகிப் போனது. ஆஸ்பிடலில் சேர்த்த மறுநாளே ஒரே மகன் ரகுவை விட்டு விட்டு இறந்துப் போனாள்.

அதன் பின் அப்பா எல்லா பொறுப்புகளையும் தனி ஒருவனாக செய்தார். கஷ்டப்பட்டு, சமைத்து கொடுத்து, வேலைக்கு போகும் வழியில் பள்ளியில் விட்டுவிட்டு அதேப் போல் மாலை வேலையிலிருந்து வரும் போது வீட்டிற்கு அழைத்து வருவது என ரகுவிற்காகவே வாழ்ந்தார்.

மறுமணம் செய்து கொள்ளாமல் தாய் போல் ரகுவை அன்பு செலுத்தியும், அவன் செய்யும் தவற்றை திருத்தி நல்ல முறையில் படிக்க வைத்தார்.

ரகுவும் அப்பாவின் சொற்படி நன்றாகப் படித்து நல்ல வேலையில் சேர்ந்தான். சுகன்யாவுடன் ரகுவிற்கு திருமணம் நடந்தது. தன் மகனைப் போல் தான் சுகன்யா மீதும் அன்பு செலுத்தினார் ரகுவின் அப்பா.

அமைதியாக சென்று கொண்டிருந்த அவர்களின் வாழ்க்கையில் நான்கு நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் புரட்டிப் போட்டது.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com