

வீட்டின் மூலையில் இருந்த அந்தப் பழைய தேக்கு மர மேஜைக்கும் சத்தியமூர்த்திக்கும் ஒரு நீண்ட காலப் பந்தம் உண்டு. ஓய்வுக்கு பிறகு அதில் தான் கதைகள் எழுதுவார். அது, கிட்டதட்ட 56 வருடங்கள் பிணைப்பு.
“இந்தப் பழசை எல்லாம் குப்பையில போடுங்க அப்பா. நவீன மேசை நாற்காலி வாங்கிக் கொள்ளலாம்," என்று ராகவன் சொன்னபோது அதை மறுத்தவர் இன்னொன்றையும் சொன்னார்.
“இந்தக் காலத்திலே தேக்கு மர மேசை கிடைப்பது கஷ்டம். இவ்வளவு வருஷம் ஆகியும் என்ன பொலிவுடன் இருக்கு பாரு. இனி இதைக் குப்பையில போடு என்கிற பேச்சை எடுக்காதே.”
அன்று அவர் தனது 161-வது கதையை முடித்துவிட்டு நிமிர்ந்தபோது, வீட்டின் ஹாலில் சிரிப்புச் சத்தம் கேட்டது. அவரது மகன் ராகவன், மருமகள் சுமித்ரா மற்றும் மனைவி ஜானகி ஆகியோர் தொலைக்காட்சியில் ஏதோ ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
வாசலில் போஸ்ட்மேன் வந்து இருந்தார்.