

சூடான பானம் அளித்த உற்சாகத்துடன் அரை மணி நேரத்தில் அந்தக் கிளையின் குறைகளை எல்லாம் முந்தையக் கிளை ஆய்வு கோப்பு மூலம் நாதன் தெரிந்துகொண்டான்.
ரகு உள்ளே வந்தார். ”ஐயா நகைக்கடன் போடலாமா?”
”போடலாமே” என்று சொல்லி சாருவை அழைத்து நகைக்கடன் மதிப்பீடு செய்யும்வரை ரகுவின் பக்கம் நின்று மேல்பார்வையிடச் செய்தான்.
நகைக்கடன் விண்ணப்பம் சாருவால் நிரப்பப்பட்டது.
அன்று மூன்று நகைகடன்கள் பட்டுவாடா செய்யப்பட்டன.
மூன்று நகை பைகளையும் அரக்கிட்டு சீல் செய்து சாருவுடன் சென்று நகை பாதுகாப்பு பெட்டகம் திறந்து அந்த மூன்று நகைப் பைகளையும் வரிசைப்படி வைத்தான். சாரு அதற்குள் கடன் விண்ணப்பப் படிவங்களை அதற்குண்டான கோப்பில் ஃபைல் செய்திருந்தாள்.