

காபி குடித்து முடித்திருந்த அனு சொன்னாள், ”நாதன் சார் நாற்பது லட்சம் அனுப்புவோம். ஐம்பதுக்கு மேல் என்றால் பிராந்திய அலுவலகம் அனுமதி பெற வேண்டியிருக்கும். தாமதமாகும்.”
“செய்திருங்க…” என்றான்.
மூவரையும் நோக்கி சொன்னான், ”தினமும் காலையும் மாலையும் நாம் எனது கூண்டில் சந்திப்போம். அன்றைய திட்ட வேலைகளையும் முடிந்த வேலைகளையும் அலசுவோம்…”
பானுவும் சாருவும் அமைதியாய் அவன் சொன்னதைக் கேட்டுக்கொண்டனர்.
அனுவை அவன் கூண்டிலேயே அமர்ந்திருக்க சொல்லிய நாதன் பானுவையும் சாருவையும் இருக்கை சென்று வேலை தொடங்கப் பணித்தான்.
“யாராவது அங்கீகாரிக்கப்பட்ட வாகன இயக்குபவர்கள் இருக்காங்களா?”
”இருக்காங்க சார். இரண்டு பேர். மாறி மாறிக் கூப்பிடுவோம்.”
அழைப்பு மணி அழுத்த தம்பி உள்ளே வந்தான்.
”பணம் கொண்டு செல்ல இன்று யார் முறை?”
“ஒரு நிமிஷம் சார்...”
பண நகர்வு ரெஜிஸ்டருடன் வந்தான்.
”சலீமோடது ஐயா.”