

முந்தைய நாளின் அறிக்கைகள் வந்திருந்தன.
மின்னஞ்சலை ஒரு நோட்டமிட்டான். குறிப்பிடும்படி அஞ்சல் எதுவும் வந்திருக்கவில்லை.
நாதன் செய்திருந்த ஆய்வின்படி அவன் கிளை அமைந்திருந்த பகுதி தொழில் கடன்களுக்கு தோதான இடமாக இல்லை.
”செல்வத்தின் கிரேக்க கடவுளான ப்ளூட்டஸே சற்று கடைக்கண் பார்வையை என் பக்கம் என் கிளை நோக்கி திருப்பு நல் மனது செய்து”
நாதன் அறிந்திருந்தான், ’செல்வத்தின் கடவுளான ப்ளூட்டஸ் ஊனம் கொண்டவர். ஊனம் காரணமாய் சற்று தாமதமாகத்தான் வருவார். தாமதமாக வரும் ப்ளூட்டஸ் ஒரு இடம் விட்டு விலகும்போதோ தனது இறக்கைகள் உதவிகொண்டு வேகமாக விலகிடுவார்’
எப்பொழுது வருவாய் என் கிளை நோக்கி ப்ளூட்டஸே…
நாட்களும் கழிந்தன. நாதன் அக்கிளையின் ஒரு அங்கமாக அதிலும் முக்கிய அங்கமாய் கலந்திருந்தான்.