Bank - Maram Thavum Kilaigal
கல்கி
நெடுங்கதை: மரம் தாவும் கிளைகள் - அத்தியாயம்: 5!
Kalki
அடுத்த நாள் காலை.
நாதன் சற்று முன்னதாகவே அலுவலகத்திற்கு கிளம்பினான்.
அவன் அவசரம் புரிந்த சுதாவும் அவனுக்கு ஆவன செய்து மலர்ந்த முகத்துடன் நாதனை வழி அனுப்பி வைத்தாள்.
அனு, பானு, சாரு மூவரும் நாதன் கிளை வருமுன்னரே வந்து நாதன் வருகை எதிர்நோக்கி காத்திருந்தனர்.
நாதன் வந்ததும் அனைவரும் அவன் கூண்டினுள் வந்தனர்
நாதன் அனைவரையும் அமரச் செய்து தம்பி மூலம் அனைவருக்கும் காபி கொணரச் செய்தான்.
“இன்று நமக்கு முதல் நாணய உறுதிக்கடிதம் வருகிறது. தள்ளுபடி செய்து வாடிக்கையாளர் கணக்கு வரவு வைக்க வேண்டும்”
நாதனிடம் பானு, ”யார் சார் அந்த வாடிக்கையாளர்?” என்று வினவினாள்.
“சிக்மா குழுமம்.”

