கோலிவுட்டில் புதிய ட்ரெண்ட் : சம்பளத்திற்கு பதில் லாபத்தில் பங்கு பெற்ற ராதிகா! வசூலில் தெறிக்கவிட்ட 'தாய்க்கிழவி'!

Thai Kilavi movie Profit Sharing
Thai Kilavi movie Profit Sharing
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், நடிகை ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த 'தாய்க்கிழவி' திரைப்படம் பிப்ரவரி 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதுவரை ₹55 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய லாபத்தைக் ஈட்டியுள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான இத்திரைப்படத்தின் மூலம், படத்தின் லாபத்தில் ஒரு பங்கினைச் சம்பளமாகப் பெற்ற முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை ராதிகா சரத்குமார் பெற்றுள்ளார்.  48 ஆண்டுகால திரையுலக பயணத்தில், முதல்முறையாக ஒரு திரைப்படத்தின் லாபத்தில் பங்கு (Profit Share) அடிப்படையில் ராதிகா சம்பளம் வாங்கியுள்ளார்.

லாபப் பங்கீட்டு முறை (Profit Sharing) என்றால் என்ன?

திரைப்படத் துறையில் முன்னணி நடிகர்கள் பலர் நேரடிச் சம்பளமாக மட்டும் வாங்காமல், திரைப்படத்தின் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தைப் பங்காகப் பெறுவதை (Profit Sharing/Revenue Share) வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் விஜய், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்கள் சம்பளத்துடன் சேர்த்து, படத்தின் லாபத்திலும் பங்கு பெறுகிறார்கள். குறிப்பாக ரஜினிகாந்த் இம்முறையைப் பின்பற்றுவதில் முக்கியமானவர். விஜய், கமல்ஹாசன், அஜித்குமார் போன்றோர் மிக அதிக சம்பளம் வாங்குவதோடு, லாபத்திலும் பங்கு பெறுகின்றனர்.

சமீபகாலமாகத் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தைத் தவிர்க்க, லாப-நஷ்டங்களில் நடிகர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்ற புதிய முறையை முன்வைத்துள்ளனர். தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, மற்ற மாநிலங்களில் உள்ளதைப் போலவே நடிகர்கள் 'வியாபாரப் பங்கீட்டு முறை' (Revenue Share) அடிப்படையில் நடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

லாபப் பங்கீட்டு முறையின் காரணங்கள்

திரைப்படத்தின் லாபத்தில் பங்கு வாங்குவது என்பது தயாரிப்பு நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் அல்லது நடிகர்களுக்கு, படத்தின் பெரும் வெற்றி மூலம் அதிக லாபம் ஈட்ட வாய்ப்பளிக்கும் ஒரு நிதி உத்தியாகும். இது முதலீட்டாளர்களுக்கு 'அதிக ரிஸ்க் - அதிக லாபம்' (High-risk, high-reward) என்ற வாய்ப்பை வழங்குகிறது.

  • அதிக லாப வாய்ப்பு: படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றால், ஆரம்ப முதலீட்டை விடப் பல மடங்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

  • வட்டிச் சுமை குறைப்பு: தயாரிப்பாளர்கள் படத்திற்கான நிதியைத் திரட்டும் பொழுது, கடனுக்குப் பதிலாக லாபத்தில் பங்கு தருவதன் மூலம் வட்டிச் சுமையைக் குறைத்துக் கொள்கிறார்கள்.

  • நடிகர்களின் பொறுப்பு: பெரிய நடிகர்கள் லாபத்தில் பங்கு பெறும் பொழுது, அவர்கள் படத்தின் வெற்றிக்கு இன்னும் பொறுப்புடன் உழைக்கிறார்கள்.

  • புதிய முதலீடுகள்: திரைப்படத் துறை மீதான ஆர்வத்தினால், புதிய முதலீட்டாளர்கள் கூட்ட நிதி (Crowdfunding) அல்லது பிரத்யேக முதலீடுகள் மூலம் லாபத்தில் பங்கு பெற முன்வருகிறார்கள்.

லாபப் பங்கீட்டு முறையின் நன்மைகள்

  • தயாரிப்பாளர்களுக்கு: படத்தின் ஆரம்பக்கட்ட பட்ஜெட் சுமை குறையும்.

  • நடிகர்களுக்கு: படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றால் (Blockbuster), அவர்கள் நிர்ணயித்த சம்பளத்தை விடப் பல மடங்கு அதிகமான வருமானம் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: கொலைச் சேவல் - தமிழ் நாட்டில் நடக்கும் ஒரு உண்மை கதை!
Thai Kilavi movie Profit Sharing

தமிழ் திரையுலகில் நிலவும் நிதி நெருக்கடி மற்றும் தயாரிப்பு செலவு அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் (TFPC), அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்கள் இனி சம்பளத்திற்குப் பதிலாக லாபப் பங்கீட்டு முறையில் (Share Basis) செயல்பட வேண்டும் என்று அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com